/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பட்டய கணக்காளர் தின கொண்டாட்டம்
/
பட்டய கணக்காளர் தின கொண்டாட்டம்
ADDED : ஜூலை 01, 2024 11:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் ( ஐ.சி.ஏ.ஐ.,) சார்பில், பட்டய கணக்காளர்கள் தினம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ரேஸ்கோர்ஸ் சாலையில் மராத்தான் ஓட்டத்துடன் துவங்கியது.
தொடர் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, துடியலுார் ஐ.சி.ஏ.ஐ., அலுவலகத்தில் கொண்டாட்ட நிகழ்வு நடந்தது. இதில் பேச்சாளர் பாரதி பாஸ்கர் பங்கேற்று கருத்துக்களை முன்வைத்தார்.
30 ஆண்டுகள் பணிநிறைவு செய்த உறுப்பினர்கள், நிகழ்வில் கவுரவிக்கப்பட்டனர். இதில், எஸ்.ஐ.ஆர்.சி., முன்னாள் தலைவர் அர்ஜூன் ராஜ், ஐ.சி.ஏ.ஐ., முன்னாள் தலைவர் ராமசாமி, கிளைத் தலைவர் விஷ்ணு ஆதித்தன், செயலர் சர்வஜித் உள்ளிட்ட பல கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.