/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிவன்புரம் மஹா கணபதி கோவிலில் சதுர்த்தி பிரமோற்சவ கொடியேற்றம்
/
சிவன்புரம் மஹா கணபதி கோவிலில் சதுர்த்தி பிரமோற்சவ கொடியேற்றம்
சிவன்புரம் மஹா கணபதி கோவிலில் சதுர்த்தி பிரமோற்சவ கொடியேற்றம்
சிவன்புரம் மஹா கணபதி கோவிலில் சதுர்த்தி பிரமோற்சவ கொடியேற்றம்
ADDED : செப் 04, 2024 12:52 AM

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் அருகே சிவன்புரத்தில் உள்ள ராஜ அஷ்ட விமோசன மஹா கணபதி கோவிலில், விநாயகர் சதுர்த்தி பிரம்மோற்சவத்தின், 21ம் ஆண்டு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
மேட்டுப்பாளையம் அடுத்த சிவன்புரம் ஆசிரியர் காலனியில் ராஜா அஷ்ட விமோசன மஹா கணபதி கோவில் உள்ளது. இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி பிரம்மோற்சவ, 21ம் ஆண்டு விழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை அடுத்து விநாயகர் பூஜையில் புண்யாகவாசனம், வாஸ்து சாந்தி முடிந்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின், ஸ்ரீராஜ அஷ்ட விமோசன மகா கணபதிக்கு, மகா அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து விநாயகர் பூஜையும், மகா சங்கல்பம், புண்யாகவாசனம், மகா கணபதி ஹோமம் ஆகியவை நடந்தது. கொடி மரத்திற்கும், விநாயகருக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பின்பு கொடியேற்றம் நடந்தது. விநாயகருக்கு பூஜையும், மகா சங்கல்ப கலச பூஜையும், முதலாம் கால யாக பூஜையும் நடந்தது. அதன் பின், மஹா அபிஷேகம் செய்யப்பட்டது. இன்று காலை இரண்டாம் கால யாக பூஜையும், 108 சங்கு ஆவாஹனமும், மாலை மூன்றாம் கால யாக பூஜையும் நடக்க உள்ளது. 5ம் தேதி காலை நான்காம் கால யாக பூஜையும், மாலையில் ஐந்தாம் கால யாக பூஜையும் நடைபெற உள்ளது.
வரும் 6ம் தேதி வெள்ளிக்கிழமை காலை ஆறாம் கால யாக பூஜையும், மாலையில் ஏழாம் கால யாக பூஜையும் நடைபெற உள்ளன. 7ம் தேதி சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காலை, 6:00 மணிக்கு விநாயகர் பூஜையும், எட்டாம் கால யாக பூஜையும், மகா பூர்ணாகுதி கணபதிக்கு அபிஷேகம் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து அலங்காரம் தீபாராதனை நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர்.