/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சதுர்த்தியை தொடர்ந்து திருவிளக்கு வழிபாடு
/
சதுர்த்தியை தொடர்ந்து திருவிளக்கு வழிபாடு
ADDED : செப் 08, 2024 10:56 PM
கோவை:மாதா அமிர்தானந்தமயி தேவியின் சீடரான, பிரம்மச்சாரினி சர்வாமிர்தா சைதன்யா தலைமையில், திருவிளக்கு வழிபாடு நடந்தது.
திருவிளக்கு ஏற்றி வழிபாடு செய்வதால், கோடி புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதன்படி திருவிழா நாட்களிலும், முக்கிய பண்டிகை நாட்களிலும், கோவில்களில் திருவிளக்கு ஏற்றி பெண்கள் வழிபடுகின்றனர்.
நல்லாம்பாளையம் கணேஷ் லேஅவுட்டில், நான்காம் ஆண்டாக வெற்றிவிநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக நேற்று, மாதா அமிர்தானந்தமயி தேவியின் சீடரான பிரம்மச்சாரினி சர்வாமிர்தா சைதன்யா தலைமையில், திருவிளக்கு வழிபாடு நடந்தது.
இதில் திரளான பெண்கள் பங்கேற்று, போற்றி மந்திரங்களை பாராயணம் செய்தும், மலர்களாலும், மஞ்சள் குங்குமத்தாலும், அர்ச்சனை செய்தனர். நிறைவாக, சுமங்கலி பெண்களுக்கு மங்களபொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.