/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சவுக்கு சங்கர் ஜாமின் மனுமீண்டும் ஒத்திவைப்பு
/
சவுக்கு சங்கர் ஜாமின் மனுமீண்டும் ஒத்திவைப்பு
ADDED : மே 30, 2024 08:40 PM
கோவை:சவுக்கு சங்கர் ஜாமின் மனு மீதான உத்தரவு, ஜூன் 6ம் தேதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
சென்னையை சேர்ந்த சவுக்கு சங்கர், 'ரெட்பிக்ஸ்' என்ற யு யூடிப் சேனலுக்கு பேட்டி அளித்த போது, பெண் போலீஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து, அவதூறு கருத்து தெரிவித்ததாக, கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பேட்டியை வெளியிட்ட யு டியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டும் கைதானார்.
ஜாமினில் விடுவிக்க கோரி, கோவை ஜே.எம்:4, கோர்ட்டில், இருவரும் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். இவர்கள் மனுக்கள் மீதான உத்தரவு நேற்றைக்கு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், சவுக்கு சங்கர் ஜாமின் மனு மீதான உத்தரவு, வரும் 6ம் தேதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. பெலிக்ஸ் ஜெரால்னு மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.