/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சவுக்கு சங்கர் கோர்ட்டில் ஆஜர்மீண்டும் சிறையில் அடைப்பு
/
சவுக்கு சங்கர் கோர்ட்டில் ஆஜர்மீண்டும் சிறையில் அடைப்பு
சவுக்கு சங்கர் கோர்ட்டில் ஆஜர்மீண்டும் சிறையில் அடைப்பு
சவுக்கு சங்கர் கோர்ட்டில் ஆஜர்மீண்டும் சிறையில் அடைப்பு
ADDED : மே 14, 2024 06:45 PM
கோவை:போலீஸ் காவல் முடிந்து, கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சவுக்கு சங்கர், மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
பெண் போலீஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து, யு டியுப் சேனலில் தரக்குறைவான அவதூறு கருத்துக்களை தெரிவித்த, சென்னையை சேர்ந்த சவுக்கு சங்கர், கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது, கஞ்சா கடத்தல் உட்பட மாநிலம் ழுழுவதும் மேலும் ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரிடம் ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதியளித்து, நேற்று முன்தினம் உத்தரவிடப்பட்டது. விசாரணை முடிந்து ஜே.எம்., 4, கோர்ட்டில் போலீசார் நேற்று மாலை ஆஜர்படுத்தினர். அப்போது சவுக்கு சங்கர், 'எனக்கு கை உடைந்து இருப்பதால், கோவை மத்திய சிறையில், தனி அறையிலிருந்து வேறு அறைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்' என்று மாஜிஸ்திரேட்டிடம் கோரிக்கை வைத்தார்.
அதற்கு மாஜிஸ்திரேட், 'தனியாக மனு தாக்கல் செய்யுங்கள். மனுவை சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு பரிந்துரை செய்கிறேன்' என்று பதில் அளித்தார். வரும் 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சவுக்கு சங்கரை ஜாமினில் விடுவிக்க கோரி, கோவை ஜே.எம்., 4, கோர்ட்டில் அவரது வக்கீல் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. ஜாமினில் விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து அரசு தரப்பு உதவி வக்கீல் பிரசன்ன வெங்கடேஷ் பதில் மனு தாக்கல் செய்தார். அதை தொடர்ந்து, ஜாமின் மனு மீதான உத்தரவை வரும், 20ம் தேதிக்கு மாஜிஸ்திரேட் சரவணபாபு ஒத்திவைத்தார்.

