/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து... ஷாப்பிங் செய்யலாம்!
/
ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து... ஷாப்பிங் செய்யலாம்!
ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து... ஷாப்பிங் செய்யலாம்!
ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து... ஷாப்பிங் செய்யலாம்!
ADDED : ஆக 18, 2024 01:40 AM

ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சி அரங்குகளில் நுாற்றுக்கணக்கான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. சில புதுவரவுகள்; சில அதிகம் விரும்பி வாங்கப்பட்டவை, அதிகம் விசாரிக்கப்பட்டவை என ஏராளமான பொருட்கள் உள்ளன. அவற்றில் சில உங்கள் பார்வைக்காக...
l வீடுகளுக்கு 'மாப்' போட்டதும், ஈரத்தோடு தரையில் கிடத்துவதற்குப் பதில், ஒரு ஹேங்கரில் மாட்டினால் நன்றாக இருக்கும்தானே. ஆணி அடிக்காமல், சுவரில் ஒட்டி வைக்கும் மாப் ஹேங்கர் விற்பனைக்கு வந்திருக்கிறது.
l இடத்தை அடைத்துக் கொள்ளாமல், மடக்கி வைத்துக் கொள்ளும் போல்டபிள் ஸ்டூல் விற்பனைக்கு வந்துள்ளது. ஒரு கையில் எளிதாகத் துாக்கலாம்.
l பாத்திரம் கழுவும் ஸ்கிரப்பரில் இது புது வகை. ஸ்பிரிங் போன்ற உலோக ஸ்கிரப்பர் போல செயல்பட்டாலும், கண்ணாடி பாத்திரத்தில் கூட கீறல் விழாது. காய்கறியைக் கூட கழுவலாம்.
l மடக்கினால் ஓரடி. நீட்டி இழுத்தால் 12 அடி என, தேவையான வகையில் மாற்றிக் கொள்ளும் பேன் கிளீனர். பேன் மட்டுமின்றி, கூரையின் மூலை முடுக்கை சுத்தம் செய்தபின் மடக்கி வைக்கலாம்.
l வழக்கமாக இழுக்கும் சாப்பர் போல் அல்லாமல், எளிதாக கையால் அழுத்தி, காய்கறிகளைக் கட் செய்து கொடுக்கும் ஹேண்ட் பிரஷர் சாப்பர், இன்னுமோர் புதுவரவு.
l உச்சி முதல் பாதம் வரை, உதடு முதல் உள்ளுருப்புகள் வரை நன்மை தரும் கருஞ்சீரகத்தால் தயாரிக்கப்பட்ட பல்வேறு பொருட்கள் விற்பனைக்கு உள்ளன.
l ஹியரிங் சொல்யூசன் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டாலில் புக் செய்தால், வீட்டுக்கே வந்து, இலவசமாக காது கேளாமை தொடர்பாக இலவச டெஸ்ட் செய்து, டெமோவும் செய்து காட்டுகிறார்கள்.
l வாக்கிங், ஜாக்கிங் செய்வது சிரமம். ஆனால், உடற்பயிற்சி செய்த பலன் வேண்டும் என்பவர்களுக்காக, மேக்னெடிக் மசாஜர் விற்பனைக்கு உள்ளது. இரு பாதங்களையும் அதில் வைத்து விட்டால் போதும், 6 விதமாக மசாஜ் செய்கிறது.
l வேலை செய்து களைத்து விடுகிறது. உடல் வலி போக மசாஜ் செய்தால் பரவாயில்லை என்பவர்களுக்காகவும் தனி மசாஜர்கள் விற்பனைக்கு உள்ளன.
l சுவிட்ச் போட்டதும், ஒரு வினாடி கூட காத்திருக்காமல் உடனடியாக வெந்நீர் தரும் வாட்டர் ஹீட்டர்கள் விற்பனைக்கு உள்ளன. இன்ஸ்டன்ட் வாட்டர்ஹீட்டர்கள் மட்டுமல்லாது லிட்டர் கணக்கிலான வாட்டர் ஹீட்டர்களும் விற்பனைக்கு உள்ளன.
l மின்சார பில் பயம் காட்டுகிறதா? 3 கிலோவாட் பயன்பாடு வரை ஒட்டுமொத்த வீட்டுக்கும் ஒரே ஒரு உபகரணம் போதும். 30 சதவீதம் வரை மின்சாரத்தை சேமிக்கலாம். வீடு,கடை, அலுவலகங்கள் அனைத்திலும் பொருத்தலாம்.
l பேப்பர் நிறுவனம் அமைத்துள்ள ஸ்டாலில், ஆட்டோ கிளீன் உள்ளிட்ட வசதிகள் கொண்ட அதிநவீன சிம்னிகள், மைக்ரோ வேவ், ஓ.டி.ஜி., மற்றும் அவன், டிஷ்வாஷர் உள்ளிட்ட அல்ட்ரா மாடர்ன் பொருட்கள் அட்டகாச ஆபரில் கிடைக்கின்றன.
l இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட படுக்கை விரிப்புகள், குல்ட், போர்வை, எடைக்கணக்கில் விற்பனை செய்யப்படும் டவல்,
l குழந்தைகளுக்கான ஸ்டடி டேபிள், ஒன்றுக்குள் ஒன்றாக மூன்று வாட்டர் கேன்கள், டெலஸ்கோபிக் கார், கொரோனா பால், மூன் பால், கேண்டி பிளவர், யூனிகார்ன் ஏஞ்சல், டோனட் பேன், பபிள் கன் என குழந்தைகளுக்கான ஏராளமான விளையாட்டு உபகரணங்கள் உங்கள் குட்டீஸுக்கு புதிய அனுபவமாக இருக்கும்.
இவை மட்டுமல்லாது ஏராளமான பொருட்கள் உங்களுக்காக காத்திருக்கின்றன. குடும்பத்தோடு வாங்க, ஒவ்வொரு பொருளையும் பார்த்துப் பார்த்து ஷாப்பிங் செய்யலாம்!

