sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இந்த வாரம் ஆரவாரம் 

/

இந்த வாரம் ஆரவாரம் 

இந்த வாரம் ஆரவாரம் 

இந்த வாரம் ஆரவாரம் 


ADDED : ஆக 22, 2024 11:53 PM

Google News

ADDED : ஆக 22, 2024 11:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்த அன்பை போல வேறேது !

தன் பிள்ளைகளிடம் கண்டிப்பை காட்டி வளர்த்த பெற்றோர், பேரன், பேத்திகளின் அதிகாரத்துக்கு கட்டுப்பட்டு, கொஞ்சி விளையாடுவது காணும்போது, உறவுகளின் ஆழத்தை காட்டிவிடுகிறது. தாத்தா, பாட்டிகளில் உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், கோவை பெர்க்ஸ் பப்ளிக் பள்ளியில், 'தாத்தா - பாட்டி தினம்' இன்று கொண்டாடப்படுகிறது.

தேதி: ஆக.,23, வெள்ளி

இடம்: பெர்க்ஸ் பள்ளி தாமிரா வளாகம்,

நேரம் : 9:30 மணி

***

வண்ணங்கள் எண்ணங்கள்

ஓவியங்கள் ஆயிரம் கதைகள் பேசும். மனதின் எண்ணங்களை காட்சிப்படுத்தும். அற்புதமான ஓவியங்களின் கண்காட்சி கண்ணுக்கு விருந்து படைக்கிறது. துாரிகையின் கை வண்ணத்தை காட்ட போட்டிகளும் நடந்து வருகின்றன. வரும், 31ம் தேதி வரை இந்நிகழ்வு நடைபெறும்.தேதி: ஆக., 23, வெள்ளிஇடம்: கஸ்துாரி ஸ்ரீனிவாசன் கலையரங்கம், அவிநாசி சாலை

நேரம்: 10:00 மணி.

***

நகை கண்காட்சி

ஆர்ட் கிராப்ட் நகை கண்காட்சி, 23, 24 ஆகிய இரண்டு நாட்கள் நடக்க உள்ளது. நகைகளில் நாட்டம் கொண்ட நங்கைகள், இந்த வார வீக்கெண்ட் திட்டத்தில் இக்கண்காட்சியையும் இணைத்துக்கொள்ளலாம். தேதி: ஆக..,23, வெள்ளி இடம்: தாஜ் விவாந்தா, ரேஸ்கோர்ஸ்,

நேரம்: 11:00 மணி முதல் 8:00 மணி வரை

***

இயற்கையை கொண்டாடுவோம்

வேளாண் பல்கலை சார்பில், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் இணைப்பில் நீடித்த நிலையான மேம்பாடு என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு, 'ஈகோ-பெஸ்ட்-2024' இன்று நடக்கிறது. தேதி: ஆக., 23, வெள்ளிஇடம்: வேளாண் பல்கலை அண்ணா அரங்கம்,

நேரம்: காலை, 9:30 மணி.

***

விண்வெளி விந்தைகள்

பல ஆச்சர்யங்களையும், அதிசயங்களையும் தன்னகத்துள் வைத்துள்ள விண்வெளி பற்றி அறிந்துகொள்ளும் வகையில், இந்துஸ்தான் தொழில்நுட்ப கல்லுாரி, ஏரோநாட்டிக்கல் பொறியியல் துறையில் தேசிய அளவிலான, 'விண்வெளி தினம்' கருத்தரங்கு இன்று நடக்கிறது.தேதி: ஆக., 23, வெள்ளிஇடம்: கல்லுாரி வளாகம், ஒத்தக்கால்மண்டபம்,

நேரம்: காலை, 10:00 மணி.

***

வார்ப்பட தொழில் கண்காட்சி

இரும்பு மற்றும் இரும்பு சாரா பவுண்டரி தொழிலுக்கான சர்வதேச கண்காட்சி கோவையில் நேற்று துவங்கியுள்ளது. இத்துறை சார்ந்த நவீன இயந்திரங்கள், வாய்ப்புகள் குறித்து கண்காட்சியில் அறிந்துகொள்ளலாம்.

தேதி: ஆக., 24, சனி

இடம்: கொடிசியா வர்த்தக வளாகம்,

அவிநாசி ரோடு,

நேரம்: காலை, 10:00 மணி.

***

இலக்கியம் அறிவோம்

ஒரு மொழியின் சிறப்பை அறிய, அதன் இலக்கியங்களை அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். இதை நோக்கமாக கொண்டு, மாதம் தோறும் இலக்கிய சந்திப்பு நிகழ்வு, மாவட்ட மைய நுாலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் இளம் தலைமைமுறையினர் இலக்கிய நுால்கள் குறித்து கலந்துரையாட உள்ளனர். தேதி: ஆக., 25, ஞாயிறுஇடம்: மாவட்ட மைய நுாலகம், ஆர்.எஸ்.புரம். நேரம்: மாலை, 5:00 மணி.

***

ஓடலாம்முங்க!

'கோவையான்' நிறுவனம் சார்பில், கோவை மராத்தான் நிகழ்ச்சி, நீலம்பூர் டெக்கத்லான் வளாகத்தில் துவங்குகிறது தேதி: ஆக., 25, ஞாயிறுஇடம்: நீலம்பூர், டெக்கத்லான் வளாகம்.

நேரம்: காலை,5:00 மணி.

***

கட்டமைப்போம் கனவு இல்லத்தை!

கோவை கொடிசியா வர்த்தக வளாகத்தில், கட்டுமானம் மற்றும் இன்டீரியர் கண்காட்சி வரும், 30ம் தேதி முதல் செப்., 1 வரை நடக்கிறது. புது வீடு கட்ட திட்டமிட்டுள்ளவர்களுக்கும், இத்துறை சார்ந்தவர்களுக்கும் நல்ல வாய்ப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தேதி: ஆக., 30, வெள்ளிஇடம்: கொடிசியா வர்த்தக வளாகம், அவிநாசி ரோடு. நேரம்: காலை, 10:00 மணி.






      Dinamalar
      Follow us