ADDED : ஜூலை 02, 2026 09:20 PM
அ நிறம் | அளவு
படம் சிவா சார்
கோவை, ஜூலை 3–
பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளி மாணவர்களிடையேயான செஸ் போட்டி நேற்று நடந்தது. கோவை மாவட்டத்தில் உள்ள 1,127 பள்ளிகளில் அந்தந்த உடற்கல்வி ஆசிரியர்கள் முன்னிலையில் மாணவ, மாணவியர் செஸ் விளையாடினர். 6–8ம் வகுப்பு வரை(14 வயதுக்குட்பட்ட), 9–10ம் வகுப்பு(17 வயதுக்குட்பட்ட), 11–12ம் வகுப்பு(19 வயதுக்குட்பட்ட) என மூன்று பிரிவுகளில் போட்டிகள் இடம்பெற்றன. 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் குறுமைய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
