தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/திருமணம் செய்வதாக கூறி 35 லட்சம் சுருட்டிய பெண்

திருமணம் செய்வதாக கூறி 35 லட்சம் சுருட்டிய பெண்

திருமணம் செய்வதாக கூறி 35 லட்சம் சுருட்டிய பெண்


UPDATED : ஜூலை 02, 2026 11:10 PM

ADDED : ஜூலை 02, 2026 10:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 02, 2026 11:10 PM ADDED : ஜூலை 02, 2026 10:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வீரகேரளம் இளைஞர், திருமண தகவல் இணையதளத்தில் தனது விவரங்களை பதிவு செய்திருந்தார். சென்னை பெண் ஒருவர் அவரை தொடர்பு கொண்டார். திருமணம் தொடர்பாக பேசினர். வீடியோ கால் மூலம் பேசியபோது, ஆன்லைன் பங்குச்சந்தையில் குறுகிய காலத்தில் நல்ல லாபம் சம்பாதிக்க, குறிப்பிட்ட செயலி வழியாக முதலீடு செய்யும்படி அந்த பெண் கூறியுள்ளார்.இவரும் பல தவணைகளாக 35 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். அதன் பிறகு அந்த பெண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை. சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அவர்கள் விசாரித்தனர். அந்த பெண் கொடுத்த சென்னை முகவரி போலி என தெரிந்தது. அவர் வடமாநில மோசடி கும்பலை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடப்பதாக சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கவிதா கூறினார்.

சிறுமி பலாத்கார கொலையில் இதுவரை 16 பேர் சாட்சியம்

சூலுார் அருகே, 10 வயது சிறுமி, மே 21 ல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில், நாகப்பட்டினம் கார்த்திக்,33, தஞ்சாவூர் மோகன்,31, கைது செய்யப்பட்டு போக்சோ கோர்ட்டில், 819 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. நேற்று அரசு தரப்பில் 6 பேர் சாட்சியம் அளித்தனர். 114 அரசு தரப்பு சாட்சிகளில் இதுவரை 16 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். அடுத்த விசாரணையை 8 ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி விவேகானந்தன் உத்தரவிட்டார்.

==

போதை பொருள் விற்ற 6 பேர் சுற்றி வளைப்பு

ஆர்.எஸ் புரம், வெரைட்டி ஹால் சாலை, உக்கடம் போலீசார் ரோந்து பணியின் போது, தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட, ஆர்.எஸ் புரம் சவுந்தரராஜன், 61 மகேந்திரன், 53 சிவராமன், 73 ரவி, 44 ஐயப்பன், 45 சாதிக் அலி 45 உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்த தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

==

ஆட்சி மாறியது தெரியாமல் சரக்கு விற்ற 3 பேர் சிக்கினர்

ஆர்.எஸ். புரம் போலீசார் ரோந்து பணியின் போது, எஸ்.என். பாளையம் பகுதியில், மது பாட்டில்களை விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த, சரஸ்வதி 65 என்பவரை கைது செய்தனர்.

ராமநாதபுரம் பகுதியில் ரோந்து சென்றபோது, பொதுவெளியில் பகிரங்கமாக மது பாட்டில் விற்ற அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன், 44 பாலச்சந்திரன் 34 ஆகிய இருவரை கைது செய்தனர். இதுவரை நல்லாத்தானே போய்கிட்டு இருந்தது.. என அவர்கள் போலீசுடன் வாக்குவாதம் செய்தது வேடிக்கையாக இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us