/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கணேசபுரத்தில் இன்று 'மக்களுடன் முதல்வர்' முகாம்
/
கணேசபுரத்தில் இன்று 'மக்களுடன் முதல்வர்' முகாம்
ADDED : ஆக 07, 2024 11:24 PM
அன்னுார் : ஊராட்சிப் பகுதியில், செப். 14 வரை, 'மக்களுடன் முதல்வர்' முகாம் நடக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு, ஒரு மாதத்திற்குள் தீர்வு காணும்படி அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில், 62 முகாம்கள் நடக்கின்றன. அன்னுார் தாலுகாவில், நான்கு முகாம்கள் முடிந்து விட்டன.
ஐந்தாவது முகாம் இன்று கணேசபுரம், காளியப்பா திருமண மண்டபத்தில், காலை 10:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில், மசக்கவுண்டன் செட்டிபாளையம், குப்பேபாளையம் மற்றும் காட்டம்பட்டி ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் குறைகள், கோரிக்கை குறித்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
முகாமில் வருவாய்த்துறை, நில அளவைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, மின்வாரியம், ஆதிதிராவிடர் நலத்துறை, வேளாண்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை உள்ளிட்ட 15 துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். 44 வகையான சேவைகள் வழங்கப்படுகின்றன.
முகாமில் மூன்று ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று பயன் பெறலாம்,' என ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.