/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளமடையில் இன்று மக்களுடன் முதல்வர் முகாம்
/
வெள்ளமடையில் இன்று மக்களுடன் முதல்வர் முகாம்
ADDED : ஆக 01, 2024 12:56 AM
கோவில்பாளையம் : தமிழக அரசு, ஊரகப் பகுதிகளில், வரும் செப். 14 வரை, 'மக்களுடன் முதல்வர்' முகாம் நடைபெறும் என அறிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில், 62 முகாம்கள் நடைபெறுகின்றன.
அன்னுார் தாலுகாவில், கடந்த 17ம் தேதி பசூரில் முதல் முகாம் நடந்தது. குன்னத்தூரில் இரண்டாவது முகாம் நேற்றுமுன்தினம் நடந்தது. மூன்றாவது முகாம் இன்று வெள்ளமடை, முத்து மகாலில் நடக்கிறது. இதில் வெள்ளமடை ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குறைகள், கோரிக்கைகள் குறித்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். இன்று காலை 10:00 மணி முதல், மதியம் 3:00 மணி வரை, மனுக்கள் பெறப்படும். இம்முகாமில், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, மின்வாரியம், ஆதி திராவிட நலத்துறை, வேளாண்மை, மருத்துவம், சமூக நலம், பிற்படுத்தப்பட்டோர் நலன், மாற்றுத்திறனாளிகள் துறை உள்ளிட்ட 15 துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். 44 சேவைகள் வழங்கப்படுகின்றன.
இங்கு தரப்படும் விண்ணப்பங்களுக்கு, 30 நாட்களுக்குள் தீர்வு அளிக்கும்படி அரசு அறிவுறுத்தியுள்ளது. எனவே வெள்ளமடை ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் முகாமில் மனுக்கள் சமர்ப்பிக்கலாம், என எஸ்.எஸ். குளம் ஒன்றிய ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.