/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் * கலெக்டர் கிராந்தி குமார் துவங்கி வைத்தார்
/
முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் * கலெக்டர் கிராந்தி குமார் துவங்கி வைத்தார்
முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் * கலெக்டர் கிராந்தி குமார் துவங்கி வைத்தார்
முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் * கலெக்டர் கிராந்தி குமார் துவங்கி வைத்தார்
ADDED : செப் 10, 2024 11:48 PM
கோவை:கோவை நேரு ஸ்டேடியம் எதிரே உள்ள மாநகராட்சி கூடைப்பந்து மைதானத்தில், முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நேற்று துவங்கின.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், தமிழக முழுவதும் முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவையில் மாநகராட்சி கூடைப்பந்து மைதானத்தில், பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி நேற்று துவங்கியது.
மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் போட்டியை துவங்கி வைத்தார். இப்போட்டியை கோவை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், 1449 பேர், கல்லுாரி மாணவர்கள், 16,809 பேர், பள்ளி மாணவர்கள், 18,679 பேர், பொதுப்பிரிவில் 2167 பேர், மாற்றுத்திறனாளிகள் ஆண்கள் 654 பேர் என மொத்தம் 39,738 பேர் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் நேரு ஸ்டேடியம், மாநகராட்சி மைதானம், ஸ்ரீ கிருஷ்ணா கல்லுாரி, குமரகுரு தொழில்லுாட்ப கல்லுாரி, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி, கற்பகம் பல்கலை., பாரதியார் பல்கலை., தியாகி ராமசாமி நினைவு பள்ளி, ராமகிருஷ்ணா வித்யாலாயா பள்ளி ஆகிய, 9 இடங்களில் போட்டி நடைபெறுகிறது.
மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கும் அணிகள், மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள். தனி விளையாட்டுப் போட்டிகளில், முதல் இடத்தை பெறுபவர்களும் மாநில போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.
மாநில அளவிலான போட்டியில் முதலிடம் பிடிப்போருக்கு ரூ.ஒரு லட்சம், இரண்டாமிடம் பிடிப்பவர்களுக்கு ரூ-.75 ஆயிரம், மூன்றாமிடம் பிடிப்போருக்கு ரூ.50 ஆயிரம் என மொத்த ரூ.37 கோடி வழங்கப்பட உள்ளது.
துவக்க விழாவில், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், கோவை எம்.பி., ராஜ்குமார், மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், எம்.பி., துணை மேயர் ஆகியோர் கூடைப்பந்து விளையாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.