/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பல்லி விழுந்த உணவால் குழந்தைகள் 'அட்மிட்'
/
பல்லி விழுந்த உணவால் குழந்தைகள் 'அட்மிட்'
ADDED : செப் 12, 2024 12:23 AM

பொள்ளாச்சி:கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே, கொல்லப்பட்டியில் உள்ள அங்கன்வாடி மையத்தில், நேற்று மதிய உணவாக, காய்கறி சாதத்தை அங்கன்வாடி பணியாளர்கள் சிவகாமி, செல்வநாயகி வழங்கினர்.
அப்போது, உணவு சமைத்த பாத்திரத்தில் பல்லி கிடப்பதை கண்டு, பணியாளர்கள் அதிர்ச்சிஅடைந்தனர்.
உடனடியாக குழந்தைகள் உணவு உட்கொள்வதை தடுத்து நிறுத்தினர். பதற்றம் அடைந்த பணியாளர்கள், பெற்றோர் உதவியுடன், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு ஆறு குழந்தைகளை அழைத்து சென்றனர்.
குழந்தைகளை பரிசோதித்த டாக்டர்கள், நான்கு மணி நேரம் கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தினர். தகவல் அறிந்த ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வீணா, அரசு மருத்துவமனைக்கு வந்து விசாரித்தார்.
அவர் கூறுகையில், ''அங்கன்வாடி மையத்தில் உள்ள பணியாளர்கள் இடம் நிரப்பப்படாததால், அருகில் உள்ள மைய பணியாளர்கள், இந்த மையத்தை கவனித்து வந்தனர். சம்பவம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
நெகமம் போலீசார் விசாரிக்கின்றனர்.