/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழந்தைகள் தின விழா பரிசு வழங்கி பாராட்டு
/
குழந்தைகள் தின விழா பரிசு வழங்கி பாராட்டு
ADDED : பிப் 28, 2025 10:59 PM
வால்பாறை, ; வால்பாறை அடுத்துள்ள ேஷக்கல்முடி பாரி ஆக்ரோ எஸ்டேட் சார்பில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. எஸ்டேட் தொழிலாளர்களின் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டு தோறும் குழந்தைகள் தின விழா கொண்டாடப்படுகிறது.
ேஷக்கல்முடி எஸ்டேட் கலையரங்கில் நடைபெற்ற விழாவில் முருகாளி, ேஷக்கல்முடி, கல்யாணப்பந்தல் உள்ளிட்ட எஸ்டேட் பகுதியை சேர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் கலந்து கொண்டனர். குழந்தைகளுக்கு, பலுான் உடைத்தல், ஓட்டம், நடனம், தண்ணீர் நிரப்புதல், பிஸ்கட் கடித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு எஸ்டேட் மேலாளர் சந்தோஷ்பாண்டே, முருகாளி எஸ்டேட் மருத்துவமனை டாக்டர்கள் விபின்ராஜ், வின்சா ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர்.