/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழந்தைகளுக்கான கண்காட்சி நிறைவு
/
குழந்தைகளுக்கான கண்காட்சி நிறைவு
ADDED : ஆக 04, 2024 10:22 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, கே.கே.ஜி., திருமண மண்டபத்தில், குழந்தைகளுக்கான ரோபாடிக் பறவைகள், விலங்குகள் கண்காட்சி கடந்த, 2ம் தேதி முதல் நடந்து வருகிறது. துவக்க விழாவில், சிறப்பு விருந்தினராக கிணத்துக்கடவு முன்னாள் எம்.எல்.ஏ., சண்முகமும், மற்றும் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் சம்பத், பிரதீப், நாசர், ரமேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இக்கண்காட்சியில், பழங்கால நாணயங்கள், தபால் தலைகள், கரன்சி நோட்டுகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. தவிர, வண்ணமீன் கண்காட்சி, அச்சமூட்டும் பேய்வீடு, வீ.ஆர்., விளையாட்டுகள் குழந்தைகளை கவரும் வகையில் உள்ளது.
பார்வையாளர்கள், தினமும் காலை, 11:00 முதல் இரவு, 9:00 மணி வரை அனுமதிக்கப்படுகின்றனர். கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறவும் உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஒமேகா நிகழ்ச்சி நிறுவனர் வெங்கடேஷ்குமார் செய்து வருகிறார்.