/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சித்தாபுதுார் ஐயப்பன் கோவில் ஆண்டு விழா கொடியேற்றம்
/
சித்தாபுதுார் ஐயப்பன் கோவில் ஆண்டு விழா கொடியேற்றம்
சித்தாபுதுார் ஐயப்பன் கோவில் ஆண்டு விழா கொடியேற்றம்
சித்தாபுதுார் ஐயப்பன் கோவில் ஆண்டு விழா கொடியேற்றம்
ADDED : ஏப் 06, 2024 06:57 AM

கோவை : சித்தாபுதுார் ஐயப்பன் கோவில் திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.
சித்தாபுதுார் ஐயப்பன் கோவிலின், 55வது ஆண்டு திருவிழா நேற்று துவங்கி, ஏப்.,12ம் தேதி ஆறாட்டு திருவீதி உலாவுடன் நிறைவடைகிறது.
நேற்று நடந்த கொடியேற்ற விழாவில், அறநிலையத்துறை இணை கமிஷனர் ரமேஷ், சித்தாபுதுர் ஐயப்பன் கோவில் தலைவர் ராமச்சந்திரன், உபதலைவர்கள் கோபாலகிருஷ்ணன், வேலாயுதன், பொது செயலாளர் விஜயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
கொடியேற்றத்தை தொடர்ந்து, மட்டனுார் பஞ்சவாத்ய குழுவினரின் முத்தாயம்பகை கலை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து இன்று முதல் 12ம் தேதி வரை பல்வேறு பூஜைகள், நிகழ்ச்சிகளுடன் இறுதி நாள் ஆறாட்டு திருவீதி உலாவுடன், திருவிழா நிறைவடைகிறது.