/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'காலத்தை வென்ற சினிமா பாடல்கள்'; ஓவியர் ஜீவா பேச்சு
/
'காலத்தை வென்ற சினிமா பாடல்கள்'; ஓவியர் ஜீவா பேச்சு
'காலத்தை வென்ற சினிமா பாடல்கள்'; ஓவியர் ஜீவா பேச்சு
'காலத்தை வென்ற சினிமா பாடல்கள்'; ஓவியர் ஜீவா பேச்சு
ADDED : செப் 15, 2024 11:51 PM

கோவை : 'காலத்தை வென்ற சினிமா பாடல்களை, கவிஞர் சுபா ரசித்த இலக்கிய சுவையுடன் இந்த நுாலை எழுதி இருக்கிறார்' என்று நுால் வெளியீட்டு விழாவில் ஓவியர் ஜீவா பேசினார்.
கவிஞர் சுபா எழுதிய 'காலத்தை வென்ற கானங்கள்' மற்றும் 'சங்கீத ஸ்வரங்கள் என்ற இரண்டு நுால்களின் வெளியீட்டு விழா, வடகோவை சிந்தாமணி கூட்டுறவு அங்காடி அரங்கில் நடந்தது. நிகழ்ச்சிக்கு, கோவை புத்தகத் திருவிழா தலைவர் ராஜேஷ் தலைமை வகித்தார்.
நுால்களை ஓவியர் ஜீவா, ராஜேஷ் ஆகியோர் வெளியிட பேராசிரியர் விஜயராகவன், டாக்டர் ஜனார்த்தனன் மற்றும் சி.ஜி.எஸ். மணியன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். நுால்கள் குறித்து ஓவியர் ஜீவா பேசியதாவது:தமிழக மக்கள் மத்தியில் சினிமா ஏற்படுத்திய தாக்கத்தை வேறு எந்த ஊடகமும் ஏற்படுத்தவில்லை.
மவுனப்படங்களில் துவங்கி, பேசுப்படங்களாக வளர்ந்த தமிழ் சினிமா, இன்று வரை மக்களிடம் செல்வாக்கு பெற்றுள்ளது. அதில் சினிமா பாடல்களுக்கு முக்கிய இடம் உண்டு.
காதல், வீரம், தத்துவம், மகிழ்ச்சி, சோகம் என, அனைத்து மனித உணர்வுகளையும் சினிமா பாடல்கள் வெளிப்படுத்துகின்றன. கண்ணதாசன், வாலி, பட்டுக்கோட்டை, மருதகாசி, போன்ற கவிஞர்கள் எழுதிய பாடல்களை யாரும் மறந்து விடமுடியாது. காலத்தை வென்று நிற்கும் சினிமா பாடல்களை, கவிஞர் சுபா ரசனையோடு ரசித்து இலக்கிய சுவையுடன் இந்த நுாலை எழுதி இருக்கிறார்.
தமிழ் திரையிசை பாடல்களில் வசந்த காலத்தை உருவாக்கிய கண்ணதாசனின் பாடல்களை இந்த நுால் மீண்டும் நமக்கு நினைவு படுத்துகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.