/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சி.ஐ.எஸ்.எப்., வீரர் தற்கொலை விமான நிலையத்தில் பரபரப்பு
/
சி.ஐ.எஸ்.எப்., வீரர் தற்கொலை விமான நிலையத்தில் பரபரப்பு
சி.ஐ.எஸ்.எப்., வீரர் தற்கொலை விமான நிலையத்தில் பரபரப்பு
சி.ஐ.எஸ்.எப்., வீரர் தற்கொலை விமான நிலையத்தில் பரபரப்பு
ADDED : ஜூன் 05, 2024 06:59 AM

கோவை : கோவை விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எப்., வீரர் துப்பாக்கியால் சுட்டு, தற்கொலை செய்து கொண்டார்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சக்கர்தார், 34. மத்திய தொழில் பாதுகாப்பு படை(சி.ஐ.எஸ்.எப்.,) வீரரான இவர், கோவை விமான நிலையத்தில் நேற்று காலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அங்குள்ளகழிவறைக்கு சென்ற அவர்,தான் வைத்திருந்த ஏ.கே., 47 ரக துப்பாக்கியால் தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சத்தம் கேட்டு பாதுகாப்பு பணியில் இருந்த, இதர சி.ஐ.எஸ்.எப்., வீரர்கள் அங்கு விரைந்தனர். தகவல் அறிந்து சென்ற பீளமேடு போலீசார், சடலத்தை கைப்பற்றினர். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது. இச்சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.