/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நொய்யல் ஆற்றங்கரையில் குப்பை கொட்டும் பேரூராட்சி பொதுமக்கள் புகார்
/
நொய்யல் ஆற்றங்கரையில் குப்பை கொட்டும் பேரூராட்சி பொதுமக்கள் புகார்
நொய்யல் ஆற்றங்கரையில் குப்பை கொட்டும் பேரூராட்சி பொதுமக்கள் புகார்
நொய்யல் ஆற்றங்கரையில் குப்பை கொட்டும் பேரூராட்சி பொதுமக்கள் புகார்
ADDED : ஏப் 26, 2024 11:27 PM

சூலுார்:ராவத்துார் நொய்யல் ஆற்றங்கரையில், இருகூர் பேரூராட்சியே குப்பை கொட்டுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இருகூர் பேரூராட்சிக்கு உட்பட்டது ராவத்துார் கிராமம். இக்கிராமத்தின் வழியாக நொய்யல் ஆறு செல்கிறது.
தற்போது, கழிவு நீர் மட்டுமே ஓடும் நொய்யல் ஆற்றின் கரையில், பேரூராட்சி நிர்வாகமே குப்பைபை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து ராவத்துார் மக்கள் கூறியதாவது:
எங்கள் ஊர் வழியாக செல்லும் நொய்யல் ஆற்றில், கழிவு நீர் தான் பெருமளவில் ஓடுகிறது.
ராவத்துார் - சூலூர் ரோட்டை ஒட்டி ஆற்றங்கரை உள்ளதால், வாகனங்களில் வந்து குப்பை மற்றும் கழிவுகளை இரவு நேரத்தில் கொட்டி செல்வது அதிகரித்துள்ளது.
இதனால், சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரசாயன கழிவுகள், மது பாட்டில்கள், காலாவதியான மருந்துகள் கொட்டும் இடமாக ஆற்றங்கரை மாறி வருவது வருத்தமளிக்கிறது.
இந்நிலையில், ஊரை ஒட்டி ஆற்றங்கரையில் உள்ள மயானத்தில், பேரூராட்சி ஊழியர்களே, வாகனத்தில் வந்து குப்பையை கொட்டி, தீ வைத்து செல்கின்றனர்.
இதனால், எந்நேரமும் குப்பை புகைந்து கொண்டே இருக்கிறது. இதனால், சுற்றுச்சூழல் மாசடைகிறது. மயானத்துக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருகூரில் குப்பையை தரம் பிரிக்கும் பூங்கா உள்ளது.
திடக்கழிவு மேலாண்மைதிட்டத்தை செயல்படுத்தி, சுகாதாரத்தை பேண வேண்டிய பேரூராட்சி நிர்வாகமே, ஆற்றங்கரையில் குப்பை கொட்டி, சீர்கேட்டை ஏற்படுத்துவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
ஆற்றங்கரையில் குப்பை கொட்டுவதை பேரூராட்சி நிர்வாகம் நிறுத்த வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

