நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இரு சவரன் 'அபேஸ்'
செல்வபுரம் அருகே தெலுங்குபாளையத்தை சேர்ந்தவர் நந்தகுமார்,52. இவர் கடந்த, 26ம் தேதி காலை, 11:00 மணிக்கு அதேபகுதியில் உள்ள கோவில் திருவிழாவுக்கு சென்றார். அன்றைய இரவு, 9:00 மணிக்கு உக்கடத்தில் உள்ள, 'டாஸ்மாக்' மதுக்கடை முன்பு மது குடித்துவிட்டு கிடந்தார். அங்கு வந்த மர்ம நபர்கள், நந்தகுமாரின் கழுத்தில் இருந்த இரு சவரன் நகை, ரூ.3,100 ரொக்கத்தை திருடி சென்றனர். புகாரின் பேரில், உக்கடம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடுகின்றனர்.
பணிக்கு இடையூறு
தெற்கு உக்கடம், பொன்விழா நகரில் பெரியகடை வீதி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அங்கு வந்த அப்பாஸ் என்பவர், 'இப்பகுதியில் ஏன் வாகன சோதனை செய்கிறீர்கள். இதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள்' என, கேள்வி கேட்டு, பணி செய்யவிடாமல் தடுத்துள்ளார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.