ADDED : ஆக 20, 2024 10:23 PM
'லேப் டாப்' திருட்டு
ஓசூரை சேர்ந்த அரவிந்த்,19, காளப்பட்டியில் தங்கி அங்குள்ள தனியார் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு இன்ஜி., படித்து வருகிறார். கடந்த 17ம் தேதி இரவு அரவிந்த், தனது நண்பர்களுடன் சேர்ந்து வாலாங்குளக்கரைக்கு சென்றுள்ளார். தனது 'லேப் டாப்' பையை அங்குள்ள இருக்கையில் வைத்துவிட்டு, நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு மீண்டும் வந்து பார்த்தபோது, 'லேப் டாப்', புத்தகங்கள் அடங்கிய பை திருடு போயிருந்தது. ரேஸ்கோர்ஸ் போலீசில் அவர் புகார் அளிக்க, விசாரணை நடந்து வருகிறது.
கஞ்சா பறிமுதல்
ரத்தினபுரி போலீசார் கண்ணப்ப நகர் ரயில்வே பாலம் அருகே ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த ரத்தினபுரி, ஆசிரியர் காலனியை சேர்ந்த அம்புரோஸ்,25, என்பவரை பிடித்து சோதனையிட்டனர். அவரிடம், 23 பாக்கெட்களில், 142 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் அம்புரோசை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
அனுமதியின்றி 'பிளக்ஸ்'
பேரூர் ரோடு, எல்.ஐ.சி., காலனி பகுதியில் செல்வபுரம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். மாலை, 4:00 மணியளவில் பாரதி ரோடு அருகே தெலுங்குபாளையத்தை சேர்ந்த மகேந்திரன்,38, என்பவர், உள்ளாட்சி அமைப்புகளின் உரிய அனுமதியின்றி ரோட்டோரம் பிளக்ஸ் போர்டு வைத்தது தெரியவந்தது. செல்வபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

