/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொங்குநாடு கல்லுாரியில் சிவில் சர்வீசஸ் கிளப்
/
கொங்குநாடு கல்லுாரியில் சிவில் சர்வீசஸ் கிளப்
ADDED : ஜூலை 22, 2024 11:56 PM

கோவை:கொங்குநாடு கலை அறிவியல் கல்லுாரியில், சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் மாணவர்களின் பங்கேற்பை அதிகரிக்கும் வகையில், வழிகாட்டுதல் வழங்க சிவில் சர்வீசஸ் பிரண்ட்ஸ் கிளப் துவக்கவிழா நிகழ்வு நடந்தது.
இதில் பங்கேற்ற, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆளுமைத்திறன், தலைமைப்பண்பு, மொழிப்புலமை மேம்பாடு அவசியம் குறித்து பேசி, மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நிகழ்வின் ஒரு பகுதியாக, மாநகரில் போலீஸ் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டுள்ள, யு-டர்ன் திட்டம் குறித்து காணொலி காட்சி திரையிடப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கல்லுாரி செயலர் வாசுகி, முதல்வர் (பொறுப்பு) சங்கீதா, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.