/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு அலுவலர்களின் அலட்சிய போக்கால் பொதுமக்கள் பாதிப்பு
/
அரசு அலுவலர்களின் அலட்சிய போக்கால் பொதுமக்கள் பாதிப்பு
அரசு அலுவலர்களின் அலட்சிய போக்கால் பொதுமக்கள் பாதிப்பு
அரசு அலுவலர்களின் அலட்சிய போக்கால் பொதுமக்கள் பாதிப்பு
ADDED : ஜூன் 23, 2024 11:57 PM
பொள்ளாச்சி;அரசு அலுவலகங்களில் பணிகளை அன்றாட நடைமுறையில் எவ்வாறு கையாள்வது என்பது குறித்து கையேடு உள்ளது. இதன் நடைமுறைகள், பொள்ளாச்சி நகரில் உள்ள அரசு அலுவலகங்களில் ஏட்டளவில் மட்டுமே உள்ளது.
இதனால், வருவாய், நகராட்சி, மின்வாரியம் என, பல்வேறு அரசு அலுவலகத்தை நாடும் மக்களிடம் அலுவலர்கள் சிலர், பொறுப்பாக நடந்து கொள்வது கிடையாது. மக்களின் தேவையை அறிந்து பணத்துக்காக, அச்சூழலை தட்டிச் கழிக்கவே முற்படுகின்றனர்.
அதேசமயம், முறையாக பணியாற்றும் அதிகாரிகள், சக ஊழியர்களை கேள்வி கேட்டால், அவர்களின் சரிவர பதிலும் கிடைப்பதில்லை.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
அரசு விதிப்படி, அடையாள அட்டை அணிவது, பணி நேரத்தின் போது அலுவலகத்தில் இருப்பது போன்றவை கட்டாயமாகும்.
ஆனால், நகரில், பல்வேறு துறை சார்ந்த சில அலுவலர்கள், இத்தகைய விதிகளை, பெரும்பாலும் பின்பற்றுவது கிடையாது. அரசு அலுவலகங்களில், அந்தந்த பிரிவில் உள்ள அதிகாரிகளின் நிலைபாடு குறித்து மக்களின் பார்வைக்கு தெரியும்படி, அறிவிப்பு இடம்பெறச் செய்ய வேண்டும்.
குறிப்பாக, அலுவலர் பணிக்கு வந்துள்ளாரா, வெளியில் செல்லும் அவர், எத்தனை மணிக்கு திரும்புவார் போன்ற தகவல்களை அறிவிப்பாக இடம் பெறச்செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.