/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொள்ளாச்சிக்கு வரும் செம்மொழி ரயில்! வழித்தட ஸ்டேஷன்களில் 'டிக்கெட்' எடுக்கலாம்
/
பொள்ளாச்சிக்கு வரும் செம்மொழி ரயில்! வழித்தட ஸ்டேஷன்களில் 'டிக்கெட்' எடுக்கலாம்
பொள்ளாச்சிக்கு வரும் செம்மொழி ரயில்! வழித்தட ஸ்டேஷன்களில் 'டிக்கெட்' எடுக்கலாம்
பொள்ளாச்சிக்கு வரும் செம்மொழி ரயில்! வழித்தட ஸ்டேஷன்களில் 'டிக்கெட்' எடுக்கலாம்
ADDED : மே 27, 2024 11:44 PM
பொள்ளாச்சி;செம்மொழி ரயில், பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனுக்கு வருவதால், அந்த ரயிலின் வழித்தட ஸ்டேஷன்களில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவுக்கு 'டிக்கெட்' எடுத்துக்கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி - கோவை இடையே, வாரத்தின் அனைத்து நாட்களும் இரு திசைகளில் இருந்தும், காலை மற்றும் மாலையில் ரயில் இயக்க வேண்டும் என, ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், கோவை - பொள்ளாச்சி - கோவை தினசரி ரயில் சேவை கடந்தாண்டு துவங்கப்பட்டது. அதில், மன்னார்குடி - கோவை ரயிலின் பெட்டிகளை கொண்டு இந்த ரயில் இயக்கப்படுகிறது.
அதில், பொள்ளாச்சியில் இருந்து இரவு, 8:55 மணிக்கு கிளம்பி, கோவைக்கு இரவு, 10:15 மணிக்கு புதிய ரயில் சேர்கிறது.கோவை, போத்தனுார், கிணத்துக்கடவு மக்கள், பொள்ளாச்சியில் காலை திருச்செந்துார் ரயிலை பிடிக்கவும் மற்றும் திருச்செந்துாரில் இருந்து ரயிலில் பொள்ளாச்சிக்கு இரவு நேரத்தில் வந்து, கோவை நோக்கி செல்ல இந்த புதிய இணைப்பு ரயில் பயனாக இருக்கும் என, ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த ரயிலில், பொள்ளாச்சிக்கு பயணிக்க, கோவையில் இறங்கி டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை; நேரடியாக 'டிக்கெட்' எடுத்துக்கொள்ளலாம் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
பொள்ளாச்சி ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் கூறியதாவது:
மன்னார்குடி - கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 16615) தினமும், இரவு மன்னார்குடியில் இருந்து புறப்படுகிறது. இதில், முன்பதிவு இல்லாத பெட்டிகள் உள்ளன.
இந்த ரயில், நீடாமங்கலம், தஞ்சாவூர், பூதலுார், திருச்சி, கரூர், ஈரோடு திருப்பூர் வழியாக கோவை வரை செம்மொழி விரைவு ரயிலாவுகம், கோவை - பொள்ளாச்சி இடையே பயணியர் ரயிலாகவும் இயக்கப்படுகிறது.
இனி செம்மொழி ரயிலில், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி செல்ல கோவையில் இறங்கி டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த ரயில் நிற்கும் அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும், நேரடியாக கிணத்துக்கடவு, பொள்ளாச்சிக்கு ரயில் டிக்கெட்டு எடுக்க, ரயில்வே நிர்வாகம் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு, கூறினர்.