/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துாய்மை இந்தியா திட்டம் 190 கழிப்பிடம் கட்ட இலக்கு
/
துாய்மை இந்தியா திட்டம் 190 கழிப்பிடம் கட்ட இலக்கு
துாய்மை இந்தியா திட்டம் 190 கழிப்பிடம் கட்ட இலக்கு
துாய்மை இந்தியா திட்டம் 190 கழிப்பிடம் கட்ட இலக்கு
ADDED : ஜூன் 20, 2024 05:55 AM
உடுமலை : உடுமலை ஒன்றியத்தில், துாய்மை இந்தியா திட்டத்தில், தனிநபர் இல்லக்கழிப்பிடம், 190 வீடுகளில் அமைக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகள் உள்ளன. திறந்த வெளிக்கழிப்பிட நிலையை முற்றிலுமாக மாற்றுவதற்கு, 'துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் தனிநபர் இல்லக்கழிப்பிடங்கள் கட்டும் திட்டம் செயல்படுகிறது.
ஒவ்வொரு வீடுகளிலும் கழிப்பிடம் கட்டுவதற்கு, அரசின் சார்பில் மானியத்தொகையாக, பயனாளிகளுக்கு, 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், அனைத்து ஊராட்சிகளிலும்நுாறு சதவீதம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டது.
அதிலும் இடநெருக்கடி, தண்ணீர் இணைப்பு இல்லாதது உள்ளிட்ட நடைமுறை சிக்கல்களால், சில வீடுகள் இத்திட்டத்தில் விடுபட்டுள்ளன. மேலும், புதிதாக வீடு கட்டுவோரும் இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கின்றனர்.
உடுமலை ஒன்றியத்தில், நடப்பாண்டில், 190 கழிப்பிடங்கள் கட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அலுவலர்கள் கூறுகையில், 'ஒவ்வொரு ஊராட்சியிலும், இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்துள்ள, பயனாளிகளின் வீடுகளில் நேரில் ஆய்வு செய்யப்படும். பின், திட்டத்தில் பயன்பெறுவதற்கான பட்டியல் அனுப்பப்படும்.
இலக்கை விட கூடுதலாக விண்ணப்பங்கள் வரும் பட்சத்தில், அவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது' என்றனர்.