/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மக்களுடன் முதல்வர் முகாம் மனுக்களுக்கு விரைவில் தீர்வு
/
மக்களுடன் முதல்வர் முகாம் மனுக்களுக்கு விரைவில் தீர்வு
மக்களுடன் முதல்வர் முகாம் மனுக்களுக்கு விரைவில் தீர்வு
மக்களுடன் முதல்வர் முகாம் மனுக்களுக்கு விரைவில் தீர்வு
ADDED : ஆக 17, 2024 12:32 AM

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, பெரியகளத்தை தனியார் திருமண மண்டபத்தில், மக்களுடன் முதல்வர் முகாம் நடந்தது.
கிணத்துக்கடவு ஒன்றியத்தில் மக்கள் குறைகளை விரைவாக தீர்க்கும் வகையில் மக்களுடன் முதல்வர் முகாம் நடத்தப்படுகிறது. ஆறாவது முகாமாக, கிணத்துக்கடவு பெரியகளத்தையில் தனியார் திருமண மண்டபத்தில், ஆண்டிபாளையம், பெரியகளந்தை மற்றும் குருநல்லிபாளையம் ஆகிய மூன்று ஊராட்சிகளுக்கு முகாம் நடந்தது.
இதில்,மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் சத்தியவிஜயன், மாவட்ட துணை கலெக்டர் முருகேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரத்தினகுமார், விஜய்குமார் மற்றும் பலதுறை அரசு அதிகாரிகள் மற்றும் ஊராட்சி தலைவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாமில், 557மனுக்கள் பெறப்பட்டன.
முகாமில், எம்.பி., ஈஸ்வரசாமி பங்கேற்றார். துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடம் பிரச்னை மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து கேட்டறிந்தார். பயனாளர்களுக்கு, நல திட்ட உதவிகளை வழங்கினார்.
முகாமில், பேசிய எம்.பி., 'மனு கொடுக்கும் ஒவ்வொருவருக்கும் பிரச்சைகள் 30 நாட்களில் சரி செய்யப்படும். பிரச்னைகள் சரி செய்யப்படவில்லை என்றால், துறை சார்ந்த அதிகாரிகள் வாயிலாக விரைவில் தீர்வு காணப்படும்,' என்றார்.

