/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதல்வர் கோப்பை விளையாட்டு முன்பதிவு செப்., 2 வரை நீட்டிப்பு
/
முதல்வர் கோப்பை விளையாட்டு முன்பதிவு செப்., 2 வரை நீட்டிப்பு
முதல்வர் கோப்பை விளையாட்டு முன்பதிவு செப்., 2 வரை நீட்டிப்பு
முதல்வர் கோப்பை விளையாட்டு முன்பதிவு செப்., 2 வரை நீட்டிப்பு
ADDED : ஆக 25, 2024 10:27 PM
கோவை:தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க, இணைய தள முன்பதிவு செய்ய செப்., 2 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கான முன்பதிவு, 4ம் தேதி முதல் நடந்து வருகிறது; 25ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் வகையில், செப்., 2 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் தாங்களாகவே தங்களது பள்ளி, கல்லுாரி மூலமாகவே முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
'ஆடுகளம்' தகவல் தொடர்பு மையத்தை, அனைத்து வேலைநாட்களிலும் காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை, 95140 00777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.