/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மானிய விலையில் கோ 32 சோள விதை: விவசாயிகளுக்கு அழைப்பு
/
மானிய விலையில் கோ 32 சோள விதை: விவசாயிகளுக்கு அழைப்பு
மானிய விலையில் கோ 32 சோள விதை: விவசாயிகளுக்கு அழைப்பு
மானிய விலையில் கோ 32 சோள விதை: விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஏப் 29, 2024 11:16 PM
சூலுார்:சித்திரை பட்டத்துக்கு ஏற்ற கோ 32 சோள விதைகள் மானிய விலையில், சூலுார் வேளாண் விரிவாக்க மையத்தில் வழங்கப்படுகிறது.
பங்குனி, சித்திரை பட்டத்துக்கு ஏற்ற கோ 32 சோளம், மானாவாரி, இறவை எனும் இரு பருவத்திலும் பயிர் செய்யலாம். தீவனத்துக்கும், தானியத்துக்கும் ஏற்ற ரகமாகும்.
இலைகள் நன்கு வளர்ந்து, கதிர்கள் சமச்சீராகவும், தானியங்கள் மஞ்சளுடன் கூடிய வெள்ளை நிறத்தில் காணப்படும். குருத்துப்பழு தாக்குதல், அடிச்சாம்பல் நோய், உள்ளிட்ட எந்த பாதிப்புகளும் இந்த ரகத்தில் ஏற்படாது. 100 முதல், 110 நாட்களில் முதிர்ச்சி அடையும். ஒரு எக்டருக்கு தானிய மகசூல், 2 ஆயிரத்து, 400 கிலோவும், தீவன மகசூல், 6 ஆயிரத்து, 500 கிலோவும் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்.
விதைச்சான்று துறை ஆய்வு செய்து, தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கி, வீரியம் மிக்க விதைகளை விவசாயிகளுக்கு வழங்குகிறது. இந்த பட்டத்தில் நிலத்தினை உழுது, வேளாண் விரிவாக்க மையத்தில் சோள விதைகளை பெற்று விதைத்து பயன் பெற சூலுார் வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.

