/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆன்லைன் விற்பனையில் அசத்தும் கோ-ஆப்டெக்ஸ்
/
ஆன்லைன் விற்பனையில் அசத்தும் கோ-ஆப்டெக்ஸ்
ADDED : ஜூன் 14, 2024 12:15 AM

கோ - ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் அனைத்து கிளைகளிலும், தற்போது அரசு தள்ளுபடி 20 சதவீதம் வழங்கப்பட்டு வருவதாக மண்டல மேலாளர் அம்சவேணி தெரிவித்துள்ளார்.
கோ-ஆப்டெக்ஸ் கிளைகளில் சிறப்பு தள்ளுபடியில், விற்பனைக்காக பட்டு புடவைகள், பருத்தி காட்டன், காஞ்சி காட்டன், சுங்குடி சேலைகள், மெத்தை விரிப்புகள். சுடிதார் ரகங்கள், குர்தீஸ், நைட்டிகள் லினன், ரெடிமேட் சட்டைகள் விற்பனைக்கக வைக்கப்பட்டுள்ளன.
மேலும், ஆன்லைன் www.cooptex.gov.in வாயிலாக ஆடைகள் வாங்குபவர்களுக்கு, கூடுதலாக 5 முதல் 25 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
வாடிக்கையாளர்களின் வசதிக்காக, மாதந்திர சேமிப்பு திட்டம ஆரம்பமாகவுள்ளது. இதில், மாதம் 300 ரூபாய் 11 மாதங்கள் செலுத்தவேண்டும். 12வது மாத தவணை, கே-ஆப்டெக்ஸ் நிறுவனமேவழங்கும். கூடுதல் முதிர்வு தொகைக்கு துணிகளை வாங்கிக்கொள்ளலாம். என் தகவலை கோ- ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் அம்சவேணி தெரிவித்தார்.