/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை - அவிநாசி சாலை மேம்பாலத்தில் பணிகள் ஜரூர்; டிசம்பரில் பணிகளை முடிக்க திட்டம்
/
கோவை - அவிநாசி சாலை மேம்பாலத்தில் பணிகள் ஜரூர்; டிசம்பரில் பணிகளை முடிக்க திட்டம்
கோவை - அவிநாசி சாலை மேம்பாலத்தில் பணிகள் ஜரூர்; டிசம்பரில் பணிகளை முடிக்க திட்டம்
கோவை - அவிநாசி சாலை மேம்பாலத்தில் பணிகள் ஜரூர்; டிசம்பரில் பணிகளை முடிக்க திட்டம்
ADDED : ஜூலை 04, 2024 05:09 AM
கோவை : கோவை - அவிநாசி சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி வேகம் பெற்றுள்ளதால், வரும் டிசம்பரில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை-- அவிநாசி சாலை, உப்பிலிபாளையத்திலிருந்து சின்னியம்பாளையம் வரை, 10.1 கி.மீ. தொலைவுக்கு, 1,621.30 கோடி ரூபாயில், மாநில நெடுஞ்சாலைத்துறையால் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
மேம்பாலம், 17.25 மீட்டர் அகலத்தில், நான்கு வழிச்சாலையாக அமைக்கப்படுகிறது. பெட்டி வடிவத்தில், கான்கிரீட் கர்டர்கள் தயாரிக்கப்பட்டு, செக்மென்ட் தொழில் நுட்ப முறையில், சாலைக்கான ஓடுதளம் அமைக்கப்பட்டு வருகிறது.
10.5 மீட்டர் அகலத்தில், சாலையின் இருபக்கங்களிலும், சர்வீஸ் சாலைகளும், ஒன்றரை மீட்டர் அகலத்தில், மழை நீர் வடிகால் மற்றும் நடைபாதையும் அமைக்கப்பட்டு வருகிறது.
மக்கள் சிரமமின்றி சாலையை கடக்க, கிருஷ்ணம்மாள் கல்லுாரி, கே.எம்.சி.எச்., மருத்துவமனை, ஜி.ஆர்.ஜி., பள்ளி, பி.எஸ்.ஜி., கல்லுாரி மற்றும் லட்சுமி மில் சந்திப்பு ஆகிய 5 பகுதிகளில், சுரங்க நடைபாதை மற்றும் உயர்மட்ட நடைபாதை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர, மேம்பால பயணத்தின் போது இறங்கி ஏறும் வகையில் சாய்தளமும் அமைக்கப்பட்டு வருகின்றன. மேம்பால கட்டுமானப்பணிகளை, வரும் டிசம்பருக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
அதற்காக உப்பிலிபாளையத்திலுள்ள மேம்பாலத்தின் ஏறு தளத்திலிருந்து தார்சாலை அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளது. தற்போது அண்ணாசிலை வரை தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
பணிகளை விரைவாகவும் வேகமாகவும் முடிக்க, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களை முடுக்கிவிட்டுள்ளனர்.