sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நம்பிக்கையுடன் காத்திருக்கிறது கோவை!

/

நம்பிக்கையுடன் காத்திருக்கிறது கோவை!

நம்பிக்கையுடன் காத்திருக்கிறது கோவை!

நம்பிக்கையுடன் காத்திருக்கிறது கோவை!


ADDED : செப் 11, 2024 01:10 AM

Google News

ADDED : செப் 11, 2024 01:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தங்கள் பிரச்னைகளுக்கு, விடிவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன், ஒட்டுமொத்த தொழில் துறையினரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கொடிசியாவில் இன்று பங்கேற்கும் கலந்துரையாடலில் பங்கேற்கின்றனர்.ஜி.எஸ்.டி., வரி, ஒரே நாடு; ஒரு வரி அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இந்த வரி விதிப்பில் உள்ள சில குறைகளை களைய, ஏறக்குறைய மத்திய நிதியமைச்சகமே கோவைக்கு இன்று வருகை தந்துள்ளது. அமைச்சரின் இந்த வருகை குறித்து, கோவை தொழில்துறையினர் கூறியதாவது:

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினருக்கு, கிடைத்த நல்லதொரு வாய்ப்பு இது. ஜி.எஸ்.டி., அறிமுகமான பின், விடுத்த கோரிக்கை நீண்ட இடைவெளிக்கு பின்பு தற்போது நிறைவேறியிருக்கிறது. இது எம்.எஸ்.எம்.இ., பிரச்னைகள் ஒட்டுமொத்தமாக களையப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

- கார்த்திகேயன் கொடிசியா தலைவர்

உயிர்க்கொல்லி நோய் மருந்துகளின் மீது, விதிக்கப்பட்ட வரியை குறைத்தது, மத்திய மாநில பல்கலைகளுக்கு ஜி.எஸ்.டி., விலக்களித்தது, உயர் கல்வி ஆராய்ச்சிக்கு பொதுமக்களிடமிருந்தும், தனியாரிடமிருந்தும் பங்களிப்பை பெறலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டது போன்று, சிறு,குறு, நடுத்தர தொழில்துறையினரின் கோரிக்கைகளையும், நிதியமைச்சர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

நந்தினி ரங்கசாமி தலைவர், இந்திய தொழில் கூட்டமைப்பு - தென்மண்டலம்

இது ஒரு நல்ல முயற்சி. கருத்து கேட்டு எங்களது பிரச்சனைக்கு தீர்வுக்கு வழிகாட்ட வேண்டும். ஜாப் ஆர்டர்களுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி., வங்கி சர்பாஸ் சட்டம் ஆகியவற்றிலுள்ள, குளறுபடிகளை களைய வேண்டும்.

-ஜேம்ஸ், தலைவர் டேக்ட்

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு, இதுவரை ஜி.எஸ்.டி.,யில் இருந்த பிரச்னைக்கு தீர்வு காண இ-மெயில் வாயிலாக குறைகளை தெரிவித்தோம். மத்திய நிதியமைச்சர் நேரடியாக தொழில்துறையினரை சந்தித்து, பிரச்னைகளை களைய வருகை தருவது மிகச்சிறப்பு. இது ஒரு நல்ல சந்தர்ப்பம். இதை சிறப்பாக பயன்படுத்திக்கொள்வோம்.

- சிவக்குமார் தலைவர், காட்மா

ஒட்டுமொத்த தொழில்துறையினரையும் அழைத்து, கருத்து கேட்டு பிரச்னைகளை களைவது வரவேற்கத்தக்கது. இந்த கூட்டத்தில் மத்திய சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சரை பங்கேற்க செய்திருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இது போன்று அடிக்கடி கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். கோவையிலுள்ள ஜி.எஸ்.டி., அதிகாரிகள் இது போன்று மாதந்தோறும் துறை ரீதியான கூட்டங்களை நடத்தினால், பிரச்னைகள் உடனுக்குடன் களையப்படும்.

- சுருளிவேல் தலைவர், டான்சியா

சிறு, குறு, நடுத்தர தொழில்துறையினர், நீண்ட நாட்களாக விடுத்த கோரிக்கை தற்போது நிறைவேறுகிறது. இதனால் தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. கோவையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம், இங்குள்ள சிறு, குறு, நடுத்தர தொழில்துறைதான். நிதித்துறை அதிலுள்ள அடிப்படை பிரச்னைகளை களைய வேண்டும்.

- வனிதா மோகன் தொழிலதிபர்






      Dinamalar
      Follow us