/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையம் தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை

ADDED : செப் 17, 2024 05:44 AM
கோவை: கோவையில் உள்ள இந்திய வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு மையம் (ஐ.எப்.ஜி.டி.பி.,) , இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்விக் குழுவின் (ஐ.சி.எப்.ஆர்.இ.,) ஓர் அங்கமாகும். இந்த வளாகத்தில், சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையம் (இ.ஐ.ஏ.சி.பி.,) செயல்படுகிறது.
சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது,
மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாறுபாடுகள் அமைச்சகத்தின் பல்வேறு செயல்பாடுகள், முன்னெடுப்புகளை மக்களிடையே கொண்டு சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை இந்த மையம் மேற்கொண்டு வருகிறது.
நாடு முழுதும் 67 இ.ஐ.ஏ.சி.பி., மையங்கள் செயல்படுகின்றன. கோவை மையம் தனது சிறந்த செயல்பாடுகளுக்காக கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து 'ஏ பிளஸ்' அந்தஸ்தைப் பெற்று வந்தது.
இந்நிலையில், 2024-25ம் ஆண்டுக்கான சிறந்த மையமாக, கோவை சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையம் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்பட்டது.
டில்லியில் நடந்த தேசிய அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டத்தில், சிறந்த மையத்துக்கான விருதை மத்திய வனத்துறை இணைச் செயலாளர் நமீதா பிரசாத் வழங்கினார்.
கோவை மைய ஒருங்கிணைப்பாளரும் தலைமை விஞ்ஞானியுமான ரேகா வாரியர், முதுநிலை திட்ட அதிகாரி விக்னேஷ்வரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
விருது பெற்றவர்களை சக அதிகாரிகள் வாழ்த்தி, பாராட்டினர்.