/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை மாநகராட்சி விரிவாக்கம் உண்மை உள்ளாட்சிகள் இணைப்பு இப்போதில்லை கோவை மாவட்ட கலெக்டர் தகவல்

ADDED : ஜூலை 01, 2024 11:32 PM
கோவை:சமூக வலைதளங்களில் கோவை மாநகராட்சியை ஒட்டி அமைந்துள்ள, 20 ஊராட்சிகளும் கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்படும் என்ற தகவல் உண்மையில்லை என்று, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவை மாநகராட்சியுடன் வெள்ளமடை, அக்ரஹாரசாமக்குளம், கொண்டையம்பாளையம், சர்க்கார் சாமக்குளம், காளிபாளையம், வெள்ளானைப்பட்டி, கீரணத்தம், குருடம்பாளையம், பன்னிமடை, நீலம்பூர், இருகூர், மயிலம்பட்டி, பட்டணம், கலிக்கநாயக்கன்பாளையம், வேடபட்டி, சோமையம்பாளையம், தீத்திபாளையம், பேரூர் செட்டிபாளையம், சீரபாளையம், மலுமிச்சம்பட்டி உள்ளிட்ட, 20 ஊராட்சிகள் கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்படுவதாக, கடந்த சில தினங்களாக, சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
இது குறித்து, கலெக்டர் கிராந்திகுமார் கூறியதாவது:
கோவை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட உள்ளது உண்மைதான். அதற்கான பூர்வாங்கப்பணிகள் இனிமேல் தான் துவங்கும். அதன் பின், படிப்படியாக ஒவ்வொரு பணிகளாக முடிந்து, அரசு முறைப்படி அறிவிப்பு வெளியிடும். அதற்கு இனியும் நாட்கள் உள்ளன. தற்போது வரை, புதிதாக எந்த உள்ளாட்சியும், கோவை மாநகராட்சியோடு இணைக்கப்படவில்லை.
இவ்வாறு, அவர் கூறினார்.