/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை கோர்ட்களுக்கு மே மாதம் விடுமுறை
/
கோவை கோர்ட்களுக்கு மே மாதம் விடுமுறை
ADDED : ஏப் 30, 2024 11:27 PM
- நமது நிருபர் -
கோவை மாவட்டத்தில் பல்வேறு கோர்ட்களுக்கு மே மாதம் முழுவதும், கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கோடை காலத்தை முன்னிட்டு, மே மாதம் 1 முதல் 31 வரை, கோர்ட்களுக்கு கோடை விடுமுறை அளித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்திலும் பல்வேறு கோர்ட்கள் மே 31 வரை செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ், கூடுதல் செஷன்ஸ் கோர்ட்கள், ஐந்து சார்பு நீதிமன்றங்கள் மற்றும் ஐந்து முன்சிப் கோர்ட்களில், விசாரணை நடைபெறாது.
சி.ஜே.எம்., கோர்ட், மாஜிஸ்திரேட் கோர்ட்கள், சிறப்பு கோர்ட்கள், விரைவு கோர்ட்கள் வழக்கம் போல செயல்படும். அதே போல, மேட்டுப்பாளையம், அன்னுார், சூலுார், மதுக்கரை, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய இடங்களிலுள்ள, மாஜிஸ்திரேட் கோர்ட்கள் வழக்கம் போல செயல்படும்.
மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட் செயல்படாததால், ஜாமின், முன்ஜாமின் மற்றும் அவசர வழக்குகளை விசாரிக்கவும், அவசர சிவில் வழக்கை விசாரிக்கவும், கோடை கால கோர்ட் செயல்படும்.
இக்கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் மீது, வாரத்தில் ஒரு நாள் விசாரணை நடத்தப்படுகிறது.