/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கோவை டைஸ்' கிரிக்கெட் போட்டி துவக்கம் : வெற்றி முனைப்புடன் 20 கல்லுாரி அணிகள்
/
'கோவை டைஸ்' கிரிக்கெட் போட்டி துவக்கம் : வெற்றி முனைப்புடன் 20 கல்லுாரி அணிகள்
'கோவை டைஸ்' கிரிக்கெட் போட்டி துவக்கம் : வெற்றி முனைப்புடன் 20 கல்லுாரி அணிகள்
'கோவை டைஸ்' கிரிக்கெட் போட்டி துவக்கம் : வெற்றி முனைப்புடன் 20 கல்லுாரி அணிகள்
ADDED : மார் 05, 2025 10:55 PM

கோவை:
சி.ஐ.டி., கல்லுாரியில் நேற்று துவங்கிய 'கோவை டைஸ்' கிரிக்கெட் போட்டியில், 20 கிரிக்கெட் அணிகள் விளையாடி வருகின்றன.
கோவை மாவட்டத்தில் உள்ள பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரிகளுக்கு இடையேயான 'கோவை டைஸ்' போட்டி, சி.ஐ.டி., கல்லுாரியில் நேற்று துவங்கி வரும், 15ம் தேதி வரை நடக்கிறது.
ஆண்களுக்கான கபடி, வாலிபால், கால்பந்து, மேசைப் பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட் மற்றும் தடகள போட்டிகள் நடக்கின்றன.
பெண்களுக்கு கால்பந்து, வாலிபால், எறிபந்து, மேசைப்பந்து, கூடைப்பந்து மற்றும் தடகளப் போட்டிகளும் இடம்பெறுகிறது. கிரிக்கெட் போட்டியானது, நான்கு கல்லுாரி மைதானங்களில் நடக்கிறது. 20 அணிகள் விளையாடும் கிரிக்கெட் போட்டியை, சி.ஐ.டி., கல்லுாரி முதல்வர் ராஜேஸ்வரி நேற்று துவக்கிவைத்தார்.
முதல் போட்டியில், பி.ஏ., இன்ஜி., மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி அணியும், கே.சி.இ., அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த பி.ஏ., அணி, 20 ஓவர்களில், 8 விக்கெட்டுக்கு, 161 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த கே.சி.இ., அணி, 15.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 82 ரன்கள் எடுத்தது.
இரண்டாம் போட்டியில், ஏ.சி.இ.டி., அணியும், யுனைடெட் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி அணியும் விளையாடின. முதலில் பேட்டிங் செய்த ஏ.சி.இ.டி., அணி, 20 ஓவர்களில், 4 விக்கெட்டுக்கு, 187 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து விளையாடிய யுனைடெட் அணியினர், 19.3 ஓவர்களில், 135 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவினர். ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரியும், ரத்தினம் கல்லுாரி அணியும் மூன்றாவது போட்டியில் மோதின.
முதல் பேட்டிங் செய்த ராமகிருஷ்ணா அணியினர், 20 ஓவர்களில், 5 விக்கெட்டுக்கு, 134 ரன்கள் எடுத்தனர். 135 ரன்கள் இலக்குடன் களம் இறங்கிய ரத்தினம் கல்லுாரி அணியினர், 20 ஓவர்களில், 9 விக்கெட்டுக்கு, 99 ரன்கள் எடுத்து வெற்றி வாய்ப்பை இழந்தனர். தொடர்ந்து, போட்டிகள் நடக்கின்றன.