/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை மருத்துவ கல்லுாரி முன்னாள் மாணவர் சந்திப்பு
/
கோவை மருத்துவ கல்லுாரி முன்னாள் மாணவர் சந்திப்பு
ADDED : ஆக 14, 2024 12:55 AM

கோவை:கோவை மருத்துவ கல்லுாரியில் 1966ம் ஆண்டு படித்த மாணவர்கள், கோயமுத்துார் கிளப்பில் சந்தித்து தங்கள் பழைய நினைவுகளை புதுப்பித்துக்கொண்டனர்.
விழாவில், 'கனெக்ஷன்ஸ் 2024' என்ற பெயரில், கோவை மருத்துவ கல்லுாரி குளோபல் டாக்டர்ஸ் அலுமினி சங்கத்தின், ஆண்டு பொதுக்கூட்டம் நடந்தது. சங்கத்தின் தலைவர் அசோக் குமார் குப்தா வரவேற்றார். செயலாளர் மது சாய்ராம் கடந்த இரண்டு ஆண்டுகளில் சங்கம் சார்பில், மேற்கொள்ளப்பட்ட பணிகளை எடுத்துரைத்தார். முன்னாள் மாணவியும், ஓய்வு பெற்ற மருத்துவருமான திலகவதி, வீல்சேரில் வந்து பங்கேற்றார். வெளிநாடுகளில் செட்டில் ஆகி விட்ட ஓய்வு பெற்ற டாக்டர்கள், வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக பங்கேற்றனர்.
சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக ரகு, துணை தலைவராக அகிலா, செயலாளராக சத்தியன், பொருளாளராக மது சாய்ராம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கோவை மருத்துவ கல்லுாரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற, முன்னாள் பேராசிரியர்கள் மற்றும் 1996ம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்த, மூத்த மருத்துவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து, மருத்துவ கல்லுாரியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் இந்நாள் மாணவர்களின் இசைக்கச்சேரி நடந்தது. முன்னதாக, அவர்கள் அனைவரும் சீனியர் டாக்டர்களிடம் ஆசி பெற்றனர்.
நிகழ்ச்சியில், கோவை மருத்துவ கல்லுாரி டீன் நிர்மலா உட்பட, 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்.