/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை பிரிமீயர் லீக் போட்டிகள் துவக்கம்
/
கோவை பிரிமீயர் லீக் போட்டிகள் துவக்கம்
ADDED : மே 06, 2024 12:16 AM
கோவை:மாவட்ட அளவிலான கோவை பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டிகள் சரவணம்பட்டியில் கடந்த 3ம் தேதி துவங்கியது.
கோவை மாவட்டத்தில் உள்ள 16 வயதுக்கு மேற்பட்ட வீரர்களுக்கு, மீடியா ஒன், தவுசண்ட் பிரிக்ஸ் இணைந்து 'கோவை பிரிமீயர் லீக்' என்ற கிரிக்கெட் போட்டிகளை சரவணம்பட்டியில் உள்ள 22 யார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடத்துகின்றனர்.
இப்போட்டியில் 12 அணிகள் பங்கேற்று லீக் முறைப்படி போட்டியிடுகின்றன. இதன் துவக்க விழா கடந்த 3ம் தேதி மாலை நடந்தது. இதில், முன்னாள் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனை நிரஞ்சனா, கோவை சி.ஆர்.பி.எப்., பயிற்சி கல்லுாரி முதல்வர் அஜய் பரதன், கோவை மாவட்ட தடகள சங்க தலைவர் லீமா ரோஸ் ஆகியோர் பங்கேற்று போட்டிகளை துவக்கி வைத்தனர்.
முதல் போட்டியில் கோவை கிங்ஸ் 11 அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் கோவை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. கோவை கிங்ஸ் அணியின் மிதுன் 97 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு உதவினார்.
இரண்டாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் கோவை கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தியது. ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் விக்னேஷ் 85 ரன்கள் அடித்தார்.
மற்றொரு போட்டியில் கோயம்புத்துார் டஸ்கர்ஸ் அணி சூப்பர் ஓவரில் கோவை நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.