தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ‘எலெக்ட்ரானிக்ஸ் துறையில் கோவை கவனம் செலுத்தணும்’

‘எலெக்ட்ரானிக்ஸ் துறையில் கோவை கவனம் செலுத்தணும்’

‘எலெக்ட்ரானிக்ஸ் துறையில் கோவை கவனம் செலுத்தணும்’


ADDED : மே 30, 2026 12:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 30, 2026 12:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: இந்திய தொழில் வர்த்தக சபை கோவை அலுவலக புனரமைக்கப்பட்ட கட்டட திறப்பு விழா மற்றும் ஜி.கே.சுந்தரம் விருது வழங்கும் விழா நேற்று நடந்தது.

தொழில்துறை பிரிவில் ஆர்.எஸ்.எம்., ஸ்டீல்ஸ் நிறுவனத்துக்கும், வர்த்தக பிரிவில் மஹாவீர்ஸ் சில்க்ஸ் நிறுவனத்துக்கும், சேவை பிரிவில், மூத்த வழக்கறிஞர் நாகசுப்பிரமணியத்துக்கும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் கிருஷ்ணன் விருது வழங்கி பேசியதாவது:

இந்திய பொருளாதாரத்தில் டிஜிட்டல் பொருளாதாரத்தின் பங்களிப்பு 2012–13ம் ஆண்டு 6 சதவீதமாக இருந்தது. வரும் 2030ல் அது 20 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்ந்தால் 2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் அளவுக்கு செல்லும்.

இந்தியாவில் 98 சதவீத பணப்பரிவர்த்தனை டிஜிட்டல் முறையில் நடக்கிறது. கோவை, மாநிலத்துக்கு மட்டுமல்ல; நாட்டுக்கே தொழில் உயிர்ப்புள்ள பகுதி. கோவை தொழில்முனைவோர், டிஜிட்டல் சூழலுக்கு தகவமைத்துக் கொள்வதில் தலைமை வகிக்க வேண்டும்.

இன்று, மின்னணுவியல் என்பது உலகளவில் மிகப்பெரும் உற்பத்தித் துறையாக உள்ளது. இந்தியாவின் பங்கு சில ஆண்டுகளுக்கு முன் 2 சதவீதமாக இருந்தது. தற்போது 4 சதவீதம். இன்னும் அதிகம் தேவை. 2025ல் இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட ஒரே பொருள் மொபைல் போன். எலெக்ட்ரானிக்ஸ் துறையில் கோவை தீவிரமாக இறங்க வேண்டும்.

மத்திய அரசு, ‘மின்னணு உபகரணங்கள் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பட்ஜெட்டில் இதற்கான ஒதுக்கீடு ரூ.40 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இடம்பெற, 2027 ஜூலை வரை வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு, அவர் பேசினார்.

இந்திய தொழில்வர்த்தக சபை தலைவர் ராஜேஷ் லுந்த், செயலாளர் பிரதீப் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us