/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய ஸ்கேட்டிங் போட்டியில் கோவை மாணவிக்கு வெண்கலம்
/
தேசிய ஸ்கேட்டிங் போட்டியில் கோவை மாணவிக்கு வெண்கலம்
தேசிய ஸ்கேட்டிங் போட்டியில் கோவை மாணவிக்கு வெண்கலம்
தேசிய ஸ்கேட்டிங் போட்டியில் கோவை மாணவிக்கு வெண்கலம்
ADDED : ஏப் 22, 2024 01:01 AM
கோவை;மத்திய பிரதேசத்தில் நடந்த, தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில், கோவையை சேர்ந்த மாணவி வெண்கலம் வென்று அசத்தினார்.
இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் (எஸ்.ஜி.எப்.ஐ.,) சார்பில், 67வது தேசிய ஸ்கூல் கேம்ஸ் போட்டிகள், மத்திய பிரதேசத்தில் நடந்தன.
இதன் மாணவியர் பிரிவு 1000மீ., குவாட் ஸ்கேட்டிங் பிரிவில், கோவையை சேர்ந்த ஜெனிசா அடலின் (தமிழ் ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி) தமிழக அணி சார்பில் பங்கேற்றார்.
இப்போட்டியில், சிறப்பாக செயல்பட்ட ஜெனிசா வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார். கோவையை சேர்ந்த மாணவி, தேசிய அளவிலான எஸ்.ஜி.எப்.ஐ., ஸ்கேட்டிங் போட்டியில் பதக்கம் வெல்வது, இதுவே முதல்முறை.
வெற்றி பெற்ற மாணவியை அகாடமி பயிற்சியாளர்கள், கோவை மாவட்ட ஸ்கேட்டிங் சங்க நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் பாராட்டினர்.