ADDED : மே 25, 2026 06:12 PM
அ நிறம் | அளவு
கோவை: செங்கல்பட்டு மாவட்ட செஸ் சங்கம் சார்பில் மாநில அளவிலான செஸ் போட்டி நடந்தது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த முன்னணி வீரர்கள் பங்கேற்றனர். 9 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் சென்னையை சேர்ந்த மாணவர் சித்தார்த் அனுஜ் முதலிடத்தையும், புதுக்கோட்டையை சேர்ந்த மாணவர் தாரகன் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.
கோவையை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர் இன்பா தினேஷ் பாபு 7.5 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். ஏற்கனவே மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று வரும் இவர், வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள தேசிய செஸ் ‘சாம்பியன்ஷிப்’ போட்டியில் பங்கேற்க உள்ளார்.
மாணவரை, கோவை மாவட்ட செஸ் சங்க செயலாளர் தனசேகர், பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.
