/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில செஸ் போட்டியில் கோவை மாணவர்கள் முதலிடம்
/
மாநில செஸ் போட்டியில் கோவை மாணவர்கள் முதலிடம்
ADDED : மே 21, 2024 12:46 AM

கோவை:மாநில அளவிலான செஸ் போட்டியில் கோவையை சேர்ந்த மாணவர்கள் இருவர் முதலிடம் பிடித்தனர்.
தமிழ்நாடு செஸ் சங்கம் சார்பில் '15 வயதுக்கு உட்பட்டோருக்கான ஓபன் செஸ் சாம்பியன்ஷிப்' போட்டி புதுக்கோட்டையில் உள்ள செந்துாரன் இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்றனர். இதில் கோவை மாவட்டம் சார்பில் 36 மாணவர்கள் பங்கேற்றனர்.
இதன் மாணவர்கள் பிரிவில் ஆகாஷ் 8.5 புள்ளிகளும், மாணவியர் பிரிவில் வைஷ்ணவி 8.5 புள்ளிகளும் எடுத்து, முதலிடத்தை பிடித்து அசத்தினர்.
வெற்றி பெற்ற மாணவர்களை, கோவை மாவட்ட செஸ் சங்க நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் பாராட்டினர்.

