/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரஷ்யா போருக்கு கோவை இளைஞர்கள் :போலீசார் தீவிர கண்காணிப்பு
/
ரஷ்யா போருக்கு கோவை இளைஞர்கள் :போலீசார் தீவிர கண்காணிப்பு
ரஷ்யா போருக்கு கோவை இளைஞர்கள் :போலீசார் தீவிர கண்காணிப்பு
ரஷ்யா போருக்கு கோவை இளைஞர்கள் :போலீசார் தீவிர கண்காணிப்பு
ADDED : ஜூன் 30, 2024 11:22 PM
மேட்டுப்பாளையம்:சமூக வலைதளங்களில், போலி விளம்பரங்கள் வாயிலாக கோவை மாவட்ட இளைஞர்களை ஏமாற்றி, உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட, ரஷ்யாவுக்கு இளைஞர்களை யாராவது அழைத்து சென்றுள்ளனரான என போலீசார், மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து கோவை டி.ஐ.ஜி.,சரவணசுந்தர் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் பேரூர், பெரியநாயக்கன்பாளையம், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட 6 உட்கோட்டங்களிலும் டி.எஸ்.பி.,க்கள் வாயிலாக அனைத்து பகுதிகளிலும், ரஷ்யாவிற்கு இளைஞர்கள் யாரையாவது ஏமாற்றி அழைத்து சென்றுள்ளனரா, சமூக வலைதளங்கள், யூடியூப் போன்றவற்றில் ரஷ்யாவில் வேலை என விளம்பரங்கள் வருகிறதா, என போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கிராமங்களில், கிராம கமிட்டிகள் சார்பாகவும் அப்பகுதி மக்களுக்கு இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
கேரளா மாநில எல்லை சோதனை சாவடிகளிலும், மலைவாழ் கிராமங்கள் என அனைத்து இடங்களிலும் போலீசார் விசாரணை செய்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இளைஞர்கள் போலி விளம்பரங்களை கண்டு ஏமாறக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
-----