தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஒழுங்குமுறை கூடத்தில் குளிர் பதனகிடங்கு

ஒழுங்குமுறை கூடத்தில் குளிர் பதனகிடங்கு

ஒழுங்குமுறை கூடத்தில் குளிர் பதனகிடங்கு


ADDED : மே 18, 2026 11:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 18, 2026 11:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், விளை பொருட்களை இருப்பு வைக்க, 500 மெட்ரிக் டன் குளிர் பதன கிடங்கு காலியாக உள்ளது, என கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில், தமிழக அரசின் வேளாண் விற்பனை மற்றும் வணிக துறை சார்பில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்படுகிறது. இங்கு விவசாய விளை பொருட்களை இருப்பு வைக்க, குளிர் பதன கிடங்கும், சாதாரண கிடங்குகள் உள்ளன. விளை பொருட்களை தரம் பிரித்து மூட்டைகளாக கட்ட, பெரிய கட்டடம் மற்றும் அறுவடை செய்த விவசாய விளை பொருட்களை காய வைக்க இரண்டு உலர் களங்கள் உள்ளன.

இதுகுறித்து காரமடை ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் யுவராஜ் கூறியதாவது: மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம், அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டு உள்ளது. இங்கு 500 மெட்ரிக் டன் குளிர் பதன கிடங்கு உள்ளது. இந்த கிடங்கு நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. விளை பொருள் கெடாமல் இருக்கவும், விலை கிடைக்கும் போது, விற்பனை செய்ய வசதியாக இருக்க, குளிர் பதன கிடங்கு, மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

இருப்பு வைக்கும் விளை பொருட்களுக்கு, பொருளீட்டு கடன் வழங்கப்படும். எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும், அறுவடை செய்த விளை பொருட்களை, இருப்பு வைக்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு காரமடை ஒழுங்குமுறை விற்பனை கூட, 96592 42424 என்ற மொபைல் எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். இவ்வாறு கண்காணிப்பாளர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us