/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
45 ஏக்கரில் செம்மொழி பூங்கா கட்டுமான பணிகள் விறுவிறு 23 வகையான தோட்டங்கள் உருவாக்க கலெக்டர் 'அட்வைஸ்'
/
45 ஏக்கரில் செம்மொழி பூங்கா கட்டுமான பணிகள் விறுவிறு 23 வகையான தோட்டங்கள் உருவாக்க கலெக்டர் 'அட்வைஸ்'
45 ஏக்கரில் செம்மொழி பூங்கா கட்டுமான பணிகள் விறுவிறு 23 வகையான தோட்டங்கள் உருவாக்க கலெக்டர் 'அட்வைஸ்'
45 ஏக்கரில் செம்மொழி பூங்கா கட்டுமான பணிகள் விறுவிறு 23 வகையான தோட்டங்கள் உருவாக்க கலெக்டர் 'அட்வைஸ்'
ADDED : மே 16, 2024 05:43 AM

கோவை, : கோவையில் செம்மொழி பூங்கா வளாகத்தில் பல்நோக்கு மாநாட்டு மையம் மற்றும் திறந்தவெளி அரங்கம் கட்டும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது. அவ்வளாகத்தில், மரக்கன்றுகள் நட்டு, 23 விதமான தோட்டங்கள் உருவாக்கும் பணியை உடனடியாக துவக்க, கலெக்டர் கிராந்திகுமார் அறிவுறுத்தியுள்ளார்.
கோவை, காந்திபுரம் மத்திய சிறைச்சாலை மைதானத்தில், 45 ஏக்கரில் ரூ.172 கோடியில் செம்மொழிப் பூங்கா அமைக்கும் பணி, மாநகராட்சியால் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது நவீன வசதிகளுடன் பல்நோக்கு மாநாட்டு மையம், திறந்த வெளி அரங்கம், பூங்கா பராமரிப்பாளர்களுக்கான அறை, நுழைவாயில் மற்றும் டிக்கெட் கவுண்டர்கள், சுகாதார வளாகம், நுழைவாயில் மற்றும் செயற்கை நீரூற்று, சுற்றுச்சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது.
நமது நாட்டில் வேறெங்கும் இல்லாத வகையில், தனித்துவ அம்சங்களுடன் செம்மொழி வனம், மகரந்த வனம், மூலிகை வனம், நீர் வனம், மூங்கில் வனம், நட்சத்திர வனம், நலம் தரும் வனம், நறுமண வனம் என, 23 விதமான தோட்டங்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பழமை மாறாமல் புதுப்பிப்பு
கட்டுமான பணியை தவிர்த்து, இதர பணிகள் மேற்கொள்வது தொடர்பான ஆய்வு கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது; கலெக்டர் கிராந்திகுமார் தலைமை வகித்தார்.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தார். சிறைத்துறை, மின்வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.
சிறைத்துறை உயரதிகாரிகள் தங்கியிருக்கும் குடியிருப்பு மிகவும் பழமையானது; அவற்றை பழமை மாறாமல் புதுப்பிப்பது; சிறைத்துறை அதிகாரிகள் பயன்பாட்டுக்கு புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைத்துக் கொடுத்தல், இடையூறாக உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின்ஒயர்களை மாற்றிக் கொடுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், பயன்பாட்டில் இல்லாத சிறைத்துறை கட்டடங்களை இடிக்க அறிவுறுத்தப்பட்டது.
அப்போது, 'கட்டுமான பணிகளை டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும்.
அதற்குள், பூங்காக்களில் மரங்கள் வளர்ந்து பசுமையான சூழல் இருக்க வேண்டும். 23 தோட்டங்கள் உருவாக்குவதற்கு இப்போதே திட்டமிட்டு, மரக்கன்றுகள் நட்டு, பராமரிக்க வேண்டும். இதற்கென சிறப்பு அதிகாரி நியமித்து, வேலையை உடனடியாக துவக்க வேண்டும்' என, கலெக்டர் அறிவுறுத்தினார்.
நர்சரிகளுக்கு ஆர்டர்
இதுகுறித்து, கலெக்டர் கிராந்திகுமார் கூறுகையில், '' செம்மொழி பூங்கா வழித்தடத்தில் உள்ள ரோட்டை, சிறைத்துறையினர் பயன்படுத்தி வருகின்றனர். நுழைவாயிலை மாற்றிக் கொடுத்து, 'செக்போஸ்ட்' அமைத்துக் கொடுக்க வேண்டும். இதுதொடர்பாக விவாதிக்கப்பட்டது. 2025, மே வரை அவகாசம் இருக்கிறது; அக்கால கட்டத்துக்குள் வேலையை முடிக்கும் வகையில் முழு மூச்சாக பணியாற்ற அறிவுறுத்தியுள்ளேன். பூங்காக்கள் உருவாக்க என்னென்ன செடிகள் தேவையென நர்சரிகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. மே மாதத்துக்குள் பணி முழுமையாக முடிய வேண்டு மெனில், எந்தச் செடியை எப்போது நட வேண்டுமென திட்டமிட்டு, பணிபுரிய அறிவு றுத்தியுள்ளேன்,'' என்றார்.