/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓட்டு பதிவு இயந்திரங்கள் மாற்றி வைப்பு :அறிக்கை அளிக்க கலெக்டர் உத்தரவு

ADDED : மே 20, 2024 10:53 PM
சூலுார்;சூலுாரில் ஏழு பூத்களில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இடம் மாற்றி வைத்தது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க, உதவி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஏப்., 19 ம்தேதி லோக்சபா தேர்தல் நடந்தது. கோவை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட சூலுார் சட்டசபை தொகுதியில், சூலுார் பேரூராட்சிக்கு உட்பட்ட 148, 151, 155, 156, 157, 159, 160 ஆகிய பூத்களில், பேலட் இயந்திரங்களை, 1,2,3 என வரிசைப்படி வைக்காமல், 3,2,1 என வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சூலுார் கிழக்கு ஒன்றிய பா.ஜ., தலைவர் ரவிக்குமார், தலைமை தேர்தல் கமிஷனர், கோவை கலெக்டர் ஆகியோரிடம் புகார் அளித்திருந்தார்.இதுகுறித்து, விசாரித்து அறிக்கை அளிக்க, சூலுார் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு கலெக்டர் கிராந்தி குமார் உத்தரவிட்டுள்ளார்.