/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இணக்கமான சூழலில் இருந்து வெளியேறுபவர்களுக்கே வெற்றி மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரை
/
இணக்கமான சூழலில் இருந்து வெளியேறுபவர்களுக்கே வெற்றி மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரை
இணக்கமான சூழலில் இருந்து வெளியேறுபவர்களுக்கே வெற்றி மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரை
இணக்கமான சூழலில் இருந்து வெளியேறுபவர்களுக்கே வெற்றி மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரை
ADDED : மே 09, 2024 04:17 AM

கோவை : கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில், தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், கல்லுாரி கனவு என்ற பிரத்யேக நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், கலெக்டர் கிராந்திகுமார் தலைமை வகித்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
கடந்த, 2022ம் ஆண்டு முதல் தமிழகத்தில் நான் முதல்வன் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ், பிளஸ்2 முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் மாவட்ட அளவில் வழங்கப்படுகிறது. கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கல்லுாரி கனவு நிகழ்ச்சி நேற்று ஏற்பாடுசெய்யப்பட்டது.
இதில், கலெக்டர் கிராந்திகுமார் கூறியதாவது:
உயர்கல்வி சேர்க்கையில் தமிழகம் முன்னிலையில் இருந்தாலும்; நம் நோக்கம் 100 சதவீத சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்பதே இலக்கு. பிளஸ்2 முடித்த மாணவர்கள் பட்டியல் எடுத்து அனைவரும் உயர்கல்வி சேர்க்கை புரிந்ததை உறுதிசெய்யவுள்ளோம். அனைத்து, துறைகளும் இதில் ஒருங்கிணைந்து செயல்படும்.
வாழ்கையில் வெற்றி பெறவேண்டும் எனில், உங்களது இணக்கமான சூழலில் இருந்து வெளியேறி, முயற்சியை தொடர வேண்டும். வாய்ப்புகள் என்பது எளிதாக வராது; பல்வேறு சவால்களை கடந்து தொடர் முயற்சி இருந்தால் மட்டுமே சரியான வாய்ப்பு உங்களை வந்து அடையும். தோல்வி, வெற்றி இரண்டும் நிரந்தரமானது அல்லது முயற்சியும், தன்னம்பிக்கையும் எப்போதும் அவசியம். இவ்வாறு, அவர் பேசினார்.
இந்நிகழ்வில், பல்வேறு துறை வல்லுநர்கள் கல்லுாரி தேர்வு, கல்விக்கடன் பெறுவது எப்படி, பொறியியல் பிரிவுகளில் உள்ள வாய்ப்புகள், என மாணவர்கள் மத்தியில் விளக்கம் அளித்தனர்.
மேலும், உயர்கல்வி வழிகாட்டி கையேடு மாணவர்களுக்கு வினியோகிக்கப்பட்டது.
இதில், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலாளர் சரஸ்வதி கண்ணையன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.