/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேட்பாளர் எண்ணிக்கையை குறைத்த கலெக்டரின் 'ராஜதந்திரம்'
/
வேட்பாளர் எண்ணிக்கையை குறைத்த கலெக்டரின் 'ராஜதந்திரம்'
வேட்பாளர் எண்ணிக்கையை குறைத்த கலெக்டரின் 'ராஜதந்திரம்'
வேட்பாளர் எண்ணிக்கையை குறைத்த கலெக்டரின் 'ராஜதந்திரம்'
ADDED : ஏப் 03, 2024 10:59 PM
திருப்பூர் லோக்சபா தொகுதியில் வேட்பு மனுக்கள் பரிசீலனைக்குப் பின் இறுதியாக 16 பேர் களத்தில் இருந்தனர். இதில் நோட்டோவுக்கு ஒரு இடம் என்ற நிலையில் இரண்டு ஓட்டுப் பதிவு மெஷின்கள் வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
பிரதான கட்சி வேட்பாளர்கள் தவிர சுயே., வேட்பாளர்களும் களத்தில் இருந்தனர். ஒரு வேட்பாளர் மனுவை வாபஸ் பெற்றால் கூட ஒரு ஓட்டுப்பதிவு மெஷின் மட்டும் வைத்தால் போதும் என்ற நிலை காணப்பட்டது.
யாரை வாபஸ் பெற வைப்பது என்ற குழப்பம் ஏற்பட்டது. சமயோசிதமாக செயல்பட்ட மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கிறிஸ்துராஜ்(கலெக்டர்), மூன்று பிரதான கட்சிகளின் நிர்வாகிகளை தனிப்பட்ட முறையில் அழைத்துப் பேசி, பெயரளவுக்கு மனு தாக்கல் செய்த அந்த மூன்று கட்சிகளைச் சேர்ந்த சுயேச்சையாக மனுத்தாக்கல் செய்த மூன்று பேரையும் வாபஸ் பெற வைத்தார்.
தற்போது களத்தில் 13 பேர் என்ற நிலையில் ஒரு ஓட்டுப்பதிவு மெஷின் வைத்தால் போதும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான தொகுதிகளில், ஓட்டுப்பதிவு, ஓட்டு எண்ணிக்கை நாட்களில், தேர்தல் கமிஷன் வழங்கும் பாஸ் பெறுவதற்காகவே சில கட்சியினர் தங்கள் ஆட்களை வெறுமென களத்தில் இறக்குவது வாடிக்கையாக உள்ளது. அதற்காகவே மனுதாக்கல் செய்திருந்த மூன்று பேர் வாபஸ் பெற்றனர்.

