தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அடிப்படை வசதிகள் கலெக்டர் ஆய்வு

அடிப்படை வசதிகள் கலெக்டர் ஆய்வு

அடிப்படை வசதிகள் கலெக்டர் ஆய்வு


ADDED : மே 27, 2026 11:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 27, 2026 11:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், அம்மா உணவகம் மற்றும் ரேஷன் கடைகளில் அடிப்படை வசதிகள் மற்றும் சேவைகளின் தரத்தை கலெக்டர் பவன்குமார் நேற்று ஆய்வு செய்தார்.

மசக்காளிப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி ஆய்வின் போது, தூய்மை, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் மாணவர்களின் வருகைப்பதிவு ஆகியவற்றை பார்வையிட்டார். அம்மா உணவகத்தில் உணவின் தரம், சுகாதாரத்தை ஆய்வு செய்த அவர், தரமான உணவு வழங்க உத்தரவிட்டார்.

மைலம்பட்டியில் உள்ள ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் இருப்பு மற்றும் தரத்தை ஆய்வு செய்ததுடன், மண்ணெண்ணெய் வினியோக முறையையும் பார்வையிட்டார்.

சின்னியம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு செல்லும் சாலையை சீரமைக்க உத்தரவிட்டார். அதேபகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வேதியியல் மற்றும் கணினி ஆய்வகக் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us