/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உயர் கல்விக்கு வழிகாட்டும் 'கல்லுாரி கனவு' நிகழ்ச்சி
/
உயர் கல்விக்கு வழிகாட்டும் 'கல்லுாரி கனவு' நிகழ்ச்சி
உயர் கல்விக்கு வழிகாட்டும் 'கல்லுாரி கனவு' நிகழ்ச்சி
உயர் கல்விக்கு வழிகாட்டும் 'கல்லுாரி கனவு' நிகழ்ச்சி
ADDED : மே 11, 2024 01:35 AM

கோவை:இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில், உயர் கல்விக்கு வழிகாட்டும் 'கல்லுாரி கனவு' நிகழ்ச்சி நேற்று நடந்தது.
'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், உயர் கல்விக்கு வழிகாட்டும் கல்லுாரி கனவு நிகழ்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் நடந்து வருகிறது. இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், 17 மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
இதில், மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் என, உயர்கல்வி படிப்புகள் குறித்து கோவை அரசு கலைக் கல்லுாரி பேராசிரியர் கனகராஜ், இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் அலுவலர் கருணாகரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்டோர் விளக்கம் அளித்தனர்.
மாநகராட்சி துணை கமிஷனர் செல்வசுரபி துவக்கி வைத்து பேசுகையில், ''இதில் பங்கேற்றுள்ள மாணவ, மாணவியர் தங்களுக்கான உயர்கல்வியினை தேர்ந்தெடுத்து, நல்ல முறையில் கல்வி பயில வேண்டும். உங்களது முன்னேற்றம் குடும்பத்துக்கும், சமுதாயத்துக்கும் நன்மையை தரும் என்பதை உணர வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து, உயர்கல்வி தொடர்பாக மாணவ, மாணவியரின்கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் கல்வியாளர்கள் விளக்கம் அளித்தனர். உயர்கல்வி கண்காட்சி அரங்குகளும் இடம்பெற்றிருந்தன.