/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லுாரி கனவு திட்டம்: மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு
/
கல்லுாரி கனவு திட்டம்: மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு
ADDED : மே 06, 2024 10:41 PM
பொள்ளாச்சி:பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியான சூழலில், உயர்கல்வி சேர்க்கைக்கு வழிகாட்டும் வகையில், 'கல்லுாரி கனவு' நிகழ்வு மாவட்ட அளவில் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் தரப்பில், ஒவ்வொரு மாவட்டங்களிலும், நாளை, 8ம் தேதி முதல் 13ம் தேதி வரை கல்லுாரி கனவு திட்டம் நடத்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கோவையில் கல்லுாரி கனவு நிகழ்வு, நாளை, 8ம் தேதி நடத்தப்படவுள்ளது.
இதில், பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, உயர்கல்வியின் முக்கியத்துவம், போட்டித்தேர்வுகளின் அவசியம், எந்த துறைகளை தேர்வு செய்வது, பொறியியல் பிரிவுகள், மருத்துவ படிப்புகள், கலை,அறிவியல் பிரிவுக்கான வாய்ப்புகள், நான் முதல்வன் பாடப்பிரிவுகள், கல்விக்கடன் பெறும் வழிமுறைகள் குறித்து வல்லுநர்கள், அரசுத்துறை அதிகாரிகள் நேரடியாக விளக்கம் அளிக்கவுள்ளனர்.
கோவையில், நாளை, 8ம் தேதி மலுமிச்சம்பட்டி இந்துஸ்தான் பொறியியல் கல்லுாரியில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், உயர்கல்வித்துறை மற்றும் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.